Wednesday, August 26, 2015

அதிரையில் சம்பவம்:புது மாப்பிள்ளை கடத்தி,சிறை வைப்பு!!

நமதூரில் கடந்த சுமார் பத்தாண்டுகளுக்கு மேலாக, ஒரு வினோதமான, வக்கிரமான, கண்டிக்கத்தக்க பழக்கம் நிலவி வருகின்றது!  அதாவது, இளைஞர் ஒருவருக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டுவிட்டது என்றால், அவரின் ‘ஆப்த நண்பர்கள்’ என்று தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும் விடலைகள் உஷார் ஆகித் தமக்குள் திட்டம் போட்டுக்கொள்கிறார்கள்.

அது என்ன ?

‘எப்படியாவது புது மாப்பிள்ளையைப் புதுப் பெண்ணுடன் முதலிரவில் சேர விடக் கூடாது’ என்ற வக்கிரமான – நமதூர்ப் பரிபாஷையில், ‘பெரலி பண்ணும்’ – வன்முறைக் கலாச்சாரம்!  இதில் பல முறைகளைக் கடைப்பிடித்துக் காலித்தனம் செய்கின்றனர் நம் இளைஞர்கள்!

- புது மாப்பிள்ளையை அன்றிரவு happy ride என்று சொல்லி ஏற்றிக்கொண்டு, ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கார்களில் அந்தத் ‘தோழப் பிள்ளைகள்’ வெளியூர்களுக்கு எங்காவது கொண்டுபோய் இரவு முழுவதும் மறைத்து வைப்பது.

- புது மாப்பிள்ளைக்கும் தோழப் பிள்ளை(!)களுக்கும்கூட அறிமுகமில்லாத கிராமப்புறங்களுக்குள் சென்று, அன்றிரவு முழுவதும் அரட்டை அடிப்பது. (இன்னொன்றும் அடிப்பார்களோ என்னவோ, தெரியாதப்பா.)

- எல்லோருமாகச் சேர்ந்து Second show சினிமாவுக்குப் போய், சினிமா பார்ப்பது! அந்தப் புது மாப்பிள்ளைக்கு சினிமாவில் கவனம் இருக்குமா என்ன?

- அல்லது, ஊரிலேயே, பெண் வீட்டுப் பந்தலிலேயே, புதுப் பெண்ணின் மனக் குமுறலுக்கு முன்னாலேயே, புது மாப்பிள்ளையைச் சூழ்ந்துகொண்டு அரட்டை அடித்துக்கொண்டு, அவனை வீட்டுக்குள் செல்லவிடாமல் அன்றிரவு முழுவதும் – அதாவது விடியும்வரை - ‘கேரோ’ பண்ணி வைத்துக்கொள்வது.

- அல்லது, புதுப்பெண் – புது மாப்பிள்ளையின் அலங்கார அறையில் கூடி அமர்ந்துகொண்டு, பெண்ணையும் மாப்பிள்ளையையும் முதலிரவில் தனிமையில் சந்திக்க விடாமல் தடுத்து வைப்பது.

- இத்தியாதி, இத்தியாதி.....

இது போன்ற ‘கழிசடைக் கலாச்சாரம்’ எங்கிருந்து கிடைத்தது இவர்களுக்கு?! திருமணம் நிச்சயிக்கப்பட்ட பின்னர், இரவும் பகலும் இதய வேட்கையால், என்னவெல்லாம் அந்தப் புது மணமக்கள் கனவு கண்டுகொண்டு இருந்திருப்பார்கள்!?  இதைத் தவிடுபொடியாக்கும் இந்தத் தறிகெட்ட பழக்கம் நம் இஸ்லாமிய இளைஞர்களுக்கு வரலாமா?  அவர்கள் சிந்திக்கட்டும்! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளட்டும்!

“அப்புடித்தாண்டீ, என்னட மப்ளையையும் கடத்திக்கிட்டு போய்ட்டானுவ. இங்கே, வூட்லே வாப்பா கத்துறாஹ. காக்கா, மாமாமார் அங்கங்கே ஓடித் தேடினா, எங்கேயுமே இல்லெ!  கடைசீலே, அடுத்த நாள் காலைலே மொகத்தெத் தொங்க போட்டுக்குட்டு வந்தாரு என் மாப்ளே” என்று பழைய மணப்பெண் ஒருவர் அங்கலாய்ப்பது நம் காதில் விழுகின்றது!

இளைஞர்களே!  இஸ்லாமியப் பண்பாட்டின் பக்கம் திரும்பி வாருங்கள்!  வீண் விளையாட்டுகளில் ஈடுபட்டு, உங்கள் Islamic Identity யைக் கெடுத்துக்கொள்ளாதீர்கள்!

இது மட்டுமில்லை!  நமது பண்பாட்டிற்கே உலைவைக்கும் ‘வெடி வெடிப்பு’ப் பழக்கம்!  திருமணத்தன்று பின்னிரவில் செவிப்பறைகளைத் தாக்கும், கண் பார்வையைக் கெடுக்கும் வெடிவெடிப்பைச் சர்வ சாதாரணமாகச் செய்கின்றனர், திருமண வீட்டுக்குப் பக்கத்தில்!  பிறந்து சில நாட்களே ஆன சிறு குழந்தைகள், முதியோர்கள், இதய நோயாளிகள் போன்றோருக்குத் தீங்கு விளைக்கும் இந்த வெடிக் கலாச்சாரம் யாருடையது?  மாற்று மதத்தினர், கல்யாணமென்றும் கருமாதி என்றும் பாராமல், வெடி வெடித்துக் மகிழ்வர். அவர்களுடையதை நாம் பின்பற்றலாமா?  சிந்தியுங்கள், வாலிபர்களே!

நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்) அவர்கள் சொன்னதை இங்கு உங்களுக்கு நினைவூட்டுவது பொருத்தம் என்று கருதுகின்றேன்:
من تشبه بقوم فهو منهم

(எவரொருவர் பிற சமுதாயத்தைப் போன்று செய்வாரோ, அவர், அவர்களைச் சார்ந்தவராவார்.)

மேற்கண்ட எண்ணக் குமுறலை எழுத்தில் வடித்து இணையத்தில் பதிக்க நினைத்துக்கொண்டிருந்தபோது என் பேரப்பிள்ளை ஒருவன் சொன்ன செய்தி என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது!

அண்மையில் நமதூரில் நடந்த நிகழ்ச்சியைப் பற்றிக் கூறினான்.  புது மணமக்கள் எப்படியோ, தோழப் பிள்ளைகளின் கண்ணைக் குத்திவிட்டு, மணவறைக்குள் நுழைந்துவிட்டார்களாம்.  இதையறிந்த ‘தோழப் பிள்ளைகள்’, ‘விடக் கூடாது இவனை’ என்று கங்கணம் கட்டிக்கொண்டு, பெண் வீட்டாரிடம், “அந்த ரூமைத் திறந்து தாருங்கள்” என்று அடம் பிடித்தார்களாம். ஊம்.....!  பெண் வீட்டார் அசைந்து கொடுக்கவில்லை!

“அப்டினா, நாங்க இந்த அறைக்கு முன்னாலேயே படுத்துக்குவோம்” என்று கூறி, அடுத்தடுத்துப் பரவலாகப் படுத்துக்கொண்டார்களாம் - இரவு முழுதும், விடியும்வரை!

“அடப் பாவமே!” என்று நான் ஆச்சரியத்துடனும் சினந்தும் உணர்ச்சியை வெளிப்படுத்தியபோது, அந்தப் பேரன் சொன்னான்:

“இல்லப்பா!  இந்தப் புது மாப்புளேயும் இதுக்கு முன் பலரின் கல்யாணத்திலும் இதுபோல் செஞ்சிருக்கான், அப்பா!”

என்னத்தச் சொல்ல?

அபூ பிலால்

http://www.adirainews.net/2015/08/blog-post_757.html#comment-form

Sunday, August 23, 2015

சனாதன தர்மமும்,பள்ளி வாசல் இமாமும்

அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்
அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்
அஷ்ஹது அன்லா  இலாஹா இல் லல் லாஹ் 
அஷ்ஹது அன்லா  இலாஹா இல் லல் லாஹ் 


*******************
*************
*******


பள்ளி வாசலின் ஒலி பெருக்கியில் இருந்து வந்த அந்த தொழுகை அழைப்பில் முஸ்லிம்களின் உள்ளங்கள் அமைதி அடைந்து,ஏக இறைவனை வணங்க எல்லாரும் பள்ளி வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.

"டேய்,அப்துல் காதர்,தொழுக பாங்கு சொல்லியாச்சி,இந்த பண்ணா மீனை வீட்டுல்ல கொடுத்து விட்டு,வெர்சன பள்ளிக்கி வா?என்று அப்துல் காதரின் அப்பா முஹம்மது தம்பி அவர் வாங்கிய பண்ணா மீனை,தன் பேரனிடம் கொடுத்து விட்டு,பள்ளி நோக்கி விரைந்தார்.

.இப்படி மார்க்கெட்,வங்கி,தோப்பு,குளம்,வெட்டிப் பேச்சு பேசும் மர நிழல் மனிதர்கள்,இப்படி எல்லா மக்களும் பள்ளியை நோக்கி செல்ல ஆரம்பித்தனர்.

அழகிய கம்பீரமான அந்தப் பள்ளி வாசலின் உள்ளே,தொழுகைக்கு முன்,செய்ய வேண்டிய அங்க சுத்தி எனப்படும் உழு செய்து கொண்டு இருந்தனர் மக்கள்.அந்த ஹவுல் எனப்படும் தண்ணீர் தடாகத்தில் உலா வரும் மீன்களின் அழகை ரசித்தும்,பிடிக்க முயற்சிக்கும் கவனத்திலும் சிறுவர்கள் இருக்க,அந்த பள்ளி வாசலின் மோதினார் முகைதீன் அவர்கள் இகாமத் சொல்ல ஆரம்பித்தார்.


தொழுகை நடக்க இருப்பதன் ஒரு சமிக்கையே இந்த இகாமத் எனப்படும் வாசகங்கள்.

அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்
அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்
அஷ்ஹது அன்லா  இலாஹா இல் லல் லாஹ் 
அஷ்ஹது அன்லா  இலாஹா இல் லல் லாஹ் ********************************
**********************
*************
எல்லாரும் அவரவர் சப்பில் வந்து நிற்க,தொழுகை நடத்தப் போகும் இமாம் அவர்கள் ,எல்லாருக்கும் முன்பாக வந்து நின்றார்.நபிகள் நாயகம் ஸல் அவர்கள் எப்படி நமக்கு காட்டித் தந்தார்களோ,அப்படியேதான் தொழ வேண்டும் என்ற ஹதீஸை சொல்லி விட்டு தொழுகை நடத்த ஆரம்பித்தார்,அந்த இமாம் பஷீர் அஹமது.

********************************************
டேய் தே---பயலே,இங்க வாடா,என்ற அந்த ஊரின் உயர் சாதி இந்துவின் அதட்டலைக் கேட்டு,அதறிந்து போனார் பாஸ்கர்,இந்து சனாதன தர்மத்தின் படி அவர் ஒரு தாழ்ந்த சாதி,சூத்திரன்.அசிங்கமான பொருள் படும் படி அதட்டிய அவனின் வயது,பாஸ்கரனின் வயதை விட,கம்மிதான்.ஆனால்,அவன் உயர்ந்த சாதி,இவன் தாழ்ந்தவன்.அவர்களின் கணக்குப் படி.

டேய்,என்னடா நீங்கல்லாம் மெட்ராஸ் போய் படிச்சாலும்,அமெரிக்கா போய் கிழிச்சாலும்,எங்களுக்கு கீழ்தாண்டா.டேய் கேட்டுக்க,நாளைக்கி - பறை மேளத்தை எடுத்துக்குட்டு எங்க தெருவுக்கு உங்க ஆளுக எல்லாரையும் கூட்டிக்கிட்டு வா,அங்க ஒரு சாவு விழுந்து போச்சி,அப்படி வரலன்னா,உங்களை கோல பண்ணுவோம்,பொண்ணுங்களை கற்பழிப்போம் வீடுகளை தரை மட்டமாக்குவோம்,சாக்கிரதை.


பாஸ்கரனால் பேச முடியவில்லை.எப்படி முடியும்? பேசினால் அவனுக்கு அவன் நாக்கு இருக்காது,கால் நரம்பை வெட்டி விடுவார்கள்.என்னதான்,வக்கீலாக இருந்தாலும் - அவனால் அந்த இடத்தில பேச முடியாது,அந்த இடத்தில அவன் ஒரு தாழ்ந்தவன்.அவனை அசிங்கமாகப் பேசும்,மற்றவனோ உயர் சாதிக்காரன்.

சரி ஐயா ! பாஸ்கரனால் அது மட்டுமே சொல்ல முடியும் ,அதை சொன்னான்,சொல்லும் போது,இரு கைகளையும் கூப்பி,சான் கிடையாக அவன் கால்களில் விழுந்து,எழுந்தான்.அதை அந்த உயர் சாதிக்காரன் ரொம்பவே ரசித்தான்,தான் உயர் சாதியில் பிறந்ததற்கு.

**********************************
டேய் பாஸ்கர் நீ என்னடா சொல்றே? நாமெல்லாம் முஸ்லிம்களாக மாறிட்டா,அந்த உயர் சாதி காரங்க கிட்ட போய் நாம் கூனி குறுகி நிக்க முடியாதா?ஆச்சர்யமா இருக்குடா?அப்படி என்னதாண்டா இருக்கு அந்த இஸ்லாத்துல?

ஆமாடா,இஸ்லாத்தைப் பத்தி நிறைய படிசிருக்கேன்.இஸ்லாம் படி,இறைவன் ஒண்ணுதான், இறைவனின் கடைசி தூதர் நபிகள் நாயகம் ஸல் அவர்கள்.அல்லாஹ்வுக்கு முன்னாடி எலாரும் சமம்.ஒரு அரபியை விட,ஒரு அரபி இல்லாதவனோ - ஒரு அரபி இல்லாதவனைவிட - ஒரு அரபியோ உயர்ந்தவன் இல்லை.இப்படி இறைவனின் வேதமான குர் ஆணிலும்,நபிகள் நாயகம் ஸல் அவர்களின் பொன் மொழிகளிலும் நிறைய இருக்கு,இப்போ நமக்கு 24 மணி நேரம் மட்டும் தான் இருக்கு.இப்பவே நம்ம ஊர்ல இருக்குற பள்ளி வாசலுக்குப் போய்,இஸ்லாத்தை ஏத்துக்குவோம்.அடுத்த நிமிஷமே நம்ம எலாருடைய இன இழிவும் நீங்கிடும்,உடனடியா அவங்களோட சரி சமமா தொழுகை நடத்தலாம்.அந்த உயர் சாதிக்காரங்களும் நம்மள கொட்டு அடிக்க கூப்பிட மாட்டாங்க,கேவலப் படுத்த மாட்டாங்க ,இன்னும் சொல்ல போனா நம்மள என்ன பாய் ன்னு கூப்பிடுவாங்க.அதனால வாங்க எல்லாரும் பள்ளி வாசல் போகலாம்.


அல்லாஹ்வைத் தவிர ,வணங்கி வழிபட வேறு யாரும் இல்லை,நபிகள் நாயகம் ஸல் அவர்கள் அல்லாஹ்வின் கடைசி தூதராக இருக்கிறார்கள்.
பாஸ்கரன் உட்பட ஒரு சிறு கூட்டமாக ஆண்களும்,பெண்களும் இஸ்லாத்தை தழுவிக்கொள்ள,அல்லாஹு அக்பர்,அல்லாஹு அக்பர் என மக்கள் ஆனந்த முழக்க மிட்டனர்.

*****************************************
மறுநாள்,பாஸ்கரனும் , மற்ற மக்களும்,இஸ்லாத்துக்கு மாறிவிட்டதை அறிந்த உயர் சாதி மக்கள் என்ன செய்வது என அறியாமல் திகைத்து கொண்டும்,இனி பறை அடிக்கவும்,குடித்து விட்டு,சாவு வீட்டில் ஒப்பாரி வைக்கவும்,மலம் அள்ளவும் இனி என்ன செய்வது என விழித்துக் கொண்டிருந்தனர்.
***************************************
இஸ்லாம் ஏற்ற மக்கள் எல்லாரும்,இஸ்லாம் பற்றி அறிய 3 மாத பயிற்சிக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
*******************************************
பயிற்சி முடிந்து,இதோ இந்த முன்னாள் பாஸ்கர்,பஷீர் அஹமதுவாக மாறி,முஸ்லிம்கள் எல்லாரையும் தொழுகை வைக்க,இமாமாக நம் முன்னாள் நின்று கொண்டிருக்கிறார்.Saturday, August 22, 2015

இவர்தான் பீ.ஜைனுல் ஆபிதீன் ???

 அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹ்) இந்த பதிவை எல்லா சகோதரர்களும் முழுவதுமாக நிச்சயம் படிப்பீர்கள் என்று நம்புகிறேன்.


மேலும் இந்த சம்பவத்தில் ஒரு வார்த்தை கூட மிகைபடுத்தி எழுதவில்லை என்று அல்லாஹுவின் மீது ஆணையிட்டு கூறிக்கொள்கிறேன்.


இன்று தோஹாவில் உள்ள நண்பர் ஒருவரின் வீட்டிற்கு சென்ற போது"என்னுடைய மாமா சென்னையில் இருந்து உம்ரா செய்வதற்கு வந்திருக்கிறார்" என்று ஒருவரை அறிமுகம் செய்து வைத்தார்.அவர் பெயர் ரபியுல்லாஹ்.சுமார் 70 வயது மதிக்கத்தக்க அந்த சகோதரர் உருது மொழியை தாய்மொழியாக கொண்டவர்.அவரிடம் மார்க்க விஷயங்களை பற்றி பேசிக்கொண்டிருதந்த போது விஷயம் ஊரில் நடக்கும் ஏகத்துவ பிரசாரங்களை பற்றி வந்தது.


அப்போது அவர் "நான் நீண்ட காலமாக தாவா பணிகளை மேற்கொண்டு வருகிறேன். "1984 காலகட்டங்களில் சென்னை பூந்தமல்லியில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தோம்.அதில் யாரை உரையாற்ற அழைப்பது என்று ஆலோசித்தப்போது பிஜே என்ற இமாம் ஒருவர் தொண்டி என்ற ஊரில் இருக்கிறார்.நல்ல பேச்சாற்றல் உள்ளவர் அவரை அழைக்கலாம் என்று சிலர் ஆலோசனை சொன்னார்கள்.


அவரிடம் டெலிபொன் வசதி இல்லாத காரணத்தால் நேரில் சென்று அழைப்பதற்காக என்னை நியமித்தனர்.என்னிடம் அவருடைய வீட்டை விசாரிக்கும் போது அவருடைய தந்தை மளிகை கடை வைத்திருக்கிறார். அவரை காண வேண்டும் என்று விசாரிக்குமாறு அறிவுறுத்த பட்டது.


ஏனென்றால் பிஜே விற்கு அந்த அளவு எதிர்ப்பிருந்த காலகட்டம் அது. நானும் தொண்டியில் பஸ்விட்டு இறங்கி அடுத்துள்ள கடையில் சென்று விசாரித்தேன்.கடைக்காரருக்கு ஆரம்பத்தில் யாரென்று புரியவில்லை.பின்னர் நான் பிஜேவை பற்றி சொன்னபோது "ஓ கிறுக்கனுடைய வீடா?அப்படி தெளிவாக சொல்லுங்கள் என்று எனக்கு வழி காண்பித்தார்.நான் அவருடைய வீட்டை கண்டுபிடித்து விட்டேன்.சிறிய குடிசை வீடு.வாசலில் கதவிற்கு பதிலாக துணியை மறைப்பாக தொங்க விட்டிருந்தனர்.வாசலில் அவருடைய தந்தை என்னை கண்டதும் என்னவிஷயம் என்று வினவினார்.

 நான் வந்த விஷயத்தை சொன்னதும் "ஏனப்பா அவன் உயிரோட இருக்கிறது உங்களுக்கு பிடிக்கலையா?டைபாய்டு ஜுரம் வந்து சாககிடக்கிறான் என்புள்ளை.தயவு செய்து அவனை எங்கேயும் கூப்பிடாதீர்கள்"என்று கோபப்பட்டார்.

இதை கேட்டு ரூமில் படுத்து கிடந்த பிஜே யாரு அத்தா அது"அவரை உள்ளே வரசொல்லுங்கள் என்று சொன்னதும் நான் உள்ளே சென்றேன் ஒரு சிறிய அறையில் அவர் சோர்வாக படுத்து கிடந்தார்.அவரை பார்த்ததும் சலாம் சொல்லிவிட்டு நான் வந்த விஷயத்தை சொன்னேன்.ஆனால் தற்போது உள்ள நிலைமையில் தங்களால் வரமுடியாதல்லவா?என்று கூறி வருத்தப்பட்டேன்,அதற்க்கு அவர் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை.நான் கண்டிப்பாக வருவேன் எனக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால் என்னோடு மார்க்கப்பணிகள் முடிந்துவிட போவதில்லை.என்னை விட திறமையான ஆலிம்கள் நிறையப்பேர் உள்ளனர் என்றார்.

சரி என்று டாக்ட்டரை பார்க்க இருவரும் கிளம்பினோம்.டாக்டர் பரிசோதித்து விட்டு 104 டிகிரி விஷ காய்ச்சல் உள்ளது.அதனால் பயணம் செய்வது நல்லது இல்லை என்று அறிவுறுத்தினார்.ஆனால் பிஜேவோ நிச்சயம் போகவேண்டும் ஏதாவது செய்யுங்கள் என்று டாக்டரிடம் சொன்னார்.டாக்டர், அதற்க்கு மேல் உங்கள் இஷ்டம் என்று சொல்லிவிட்டு ஒரு ஊசி போட்டு விட்டு மாத்திரை கொடுத்து 3 மணிநேரம் நன்றாக தூங்கிவிட்டு பயணம் செய்யுங்கள் என்றார்.நாங்கள் வீட்டுக்கு வந்ததும் பிஜேவின் தாய் எங்களுக்கு டீயும் பண்ணும் சாப்பிடதந்தார்கள். சாப்பாடு முடிந்ததும் பிஜே என்னிடம் "பாய் நீங்களும் சோர்வாக இருப்பீர்கள்.என்னுடைய அருகில் படுத்து கொள்ளுங்கள்" என்றார்.

இருவரும் உறங்கிவிட்டு லுஹருடைய பாங்கு சத்தம் கேட்டு எழுந்தோம்.பிஜே எழுந்ததும் மலர்ச்சியுடன் காணப்பட்டார்.காய்ச்சல் குறைந்துள்ளதாகவும் என்னிடம் கூறினார்.லுஹர் தொழுது விட்டு புறப்பட தயாரானோம்.தொண்டி_எழும்பூர் பஸ்ஸில் ஏறினோம்.டிக்கெட் எடுக்க நான் பணம் எடுத்த போது அவர் "பாய் நான் எடுக்கிறேன் என்றார்"அதற்க்கு நான் இது என்னுடைய பணம் இல்லை.ஜமாஅத் பணம்.நம்முடைய செலவிற்கு தந்தது என்றேன்.அதற்க்கு அவர் அப்படியானால் நீங்கள் உங்கள் டிக்கெட் எடுத்துகொள்ளுங்கள் நான் என்னுடையதை எடுத்துகொள்கிறேன்"என்றார்.

நான் எவ்வளவோ சொல்லியும் அவர் கேட்க்க வில்லை.பின்னர் மறக்க விஷயங்களை பற்றி பேசி கொண்டு எழும்பூரை அடைந்தோம்.அன்றய பூந்தமல்லி சொற்ப்போழிவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.பிஜேவின் உரையும் மிக சிறப்பாக அமைந்தது. அன்றிலிர்ந்து சுமார் 30 வருடமாக நானும் பிஜேவும் நல்ல நண்பர்களாக உள்ளோம்.பழகுவதற்கு மிகவும் எளிமையானவர்.முடிவுகள் எடுப்பதில் யாருக்கும் வளைந்து கொடுக்காதவர் என்று தன் நண்பனை பற்றி பெருமையாக என்னிடம் சொன்னார்.


கேட்டு கொண்டிருந்த எனக்கு பிஜே மீது உள்ள மரியாதை கூடியது என்றே சொல்லலாம்.இதன் மூலம் இஸ்லாமிய சகோததர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது ஒருவர் மீது அவதூறு சொல்லும் முன்பு ஆயிரம் முறை யோசியுங்கள்.காரணம் நாம் சொன்ன ஒவ்வொரு வார்த்தைக்கும் நாளை மறுமையில் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்."இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம்மீது என்றென்றும் உண்டாவட்டுமாக.....!!!!!

நன்றி அதிரை பாரூக் 

 http://peacetrain1.blogspot.com/2012/05/blog-post_08.htmlThursday, August 20, 2015

ஹஜ் பயணத்தில் ‘செல்பி'

 ஹஜ் பயணத்தின் போது இஸ்லா மியர்கள் புனிதமாகக் கருதும் பகுதிகளில் ‘செல்பி’ எடுப்பது பரவலான ஆதரவையும், அதே அளவு சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இணையத்தின் சமூக வலைத்தளங்களில் விவாதம் கிளம்பியுள்ளது.

மெக்காவிலுள்ள காபாவைச் சுற்றியும், அங்கு நடைபெறும் பல்வேறு மத சம்பிரதாய நிகழ்வுகளையும் தங்களுடன் சேர்த்து ‘செல்பி’ (தங்களைத் தாங்களே எடுத்துக் கொள்ளும் புகைப்படம்) எடுத்து அதனை சமூக வலைத் தளங்களில் ஏராளமான ஹஜ் பயணிகள் பதிவேற்றம் செய்து வருகின்றனர். ஹஜ் பயண செல்பிகள் பெரும் பிரபல்யம் அடைந்துள்ளன.

24 வயதான அலி இது தொடர் பாகக் கூறும்போது, “இது எனது முதல் புனித யாத்திரை. இப்பகுதியில் என்னைச் சுற்றி நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் ஆவணப்படுத்துவது மிகவும் முக்கியமானது” எனத் தெரிவித் துள்ளார். அவர், சாத்தான் மீது கல்லெறியும் சுவர் அருகே நின்று செல்பி எடுத்துக் கொண்டுள்ளார்.

குவைத்தைச் சேர்ந்த ஒருவர் கூறும்போது, “நான் எங்கு சென்றாலும், புகைப்படம் எடுப்பேன். தற்போது அனைவரிடமும் சிறிய கேமராக்கள் உள்ளன. இவை முழு காட்சியையும் பதிவு செய்கின்றன” என்றார்.

விமர்சனம்
ஹஜ் பயண செல்பிகளை கடுமையாக விமர்சனம் செய்து, பலரும் ட்விட்டரில் கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர். நான் 90-ம் ஆண்டுகளின் மத்தி யில் உம்ரா சென்ற போது, கேமரா வைப் பார்த்த எந் தந்தை, ‘விலக் கப்பட்டது’ எனக் கூச்சலிட்டார். தற்போது, ஹஜ் செல்பிகள் பிரபல்யமாகியுள்ளது. என்ன உலகம் இது! என ஒருவர் பதிவிட் டுள்ளார்.

காவா என்ற பெயரில் ட்விட்டரில் ஒருவர் “இது அல்லாவுடன் தொடர்பு கொள்ளும் நேரம். எனது ஆன்மாவைச் சுத்திகரிக்கும் நேரம். ஹஜ் செல்பி-க்களை எடுக்கக் கூடாது” எனப் பதிவிட்டுள்ளார்.

ஆதரவு
அதே சமயம் செல்பிகளுக்கு ஆதரவாகவும் சிலர் குரல் கொடுத்துள்ளனர். ஹஜ் பயணத்தின் போது, புகைப்படங்களுக்கு அனுமதியிருக்கும் நிலையில், செல்பி-களை மட்டும் ஏன் எடுக்கக்கூடாது? எனச் சிலர் கேள்வியெழுப்பியுள்ளனர்.

பேராசிரியர் கருத்து
இதுதொடர்பாக, சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தைச் சேர்ந்த ஷாரியா சட்ட பேராசிரியர் ஒருவர் கூறும்போது, “புகைப்படங்கள் தனிப்பட்ட நினைவுப் பொக்கிஷங்களுக்காக எடுக்கப்பட்டால் அதனால் தவறில்லை. ஆனால், பரப்ப வேண்டும் என்ற நோக்கத்துக்காக ஹஜ் சம்பிரதாயப் பகுதிகளில் எடுக்கப்பட்டால் அது தடை செய்யப்பட வேண்டும். செல்பி-களைத் தவிர்ப்பது முஸ்லிம்களுக்கு நல்லது” எனத் தெரிவித்துள்ளார்.

http://tamil.thehindu.com/world/

இரவில் ஒலித்த அழுகுரல்

வழிப்போக்கர்களைச் சுமந்துகொண்டு ஒட்டகக் கூட்டம் ஒன்று மதீனாவுக்கு வந்தது. அந்தக் கூட்டத்தில் பெண்களும், குழந்தைகளும் இருந்தார்கள். இதனை ஜனாதிபதி உமர் கண்டார். வழிப்போக்கர்களான அந்தப் பயணிகளுக்கு உதவ விரும்பினார். தமது நண்பரான நபித்தோழர் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃபுடன் சேர்ந்து இரவு முழுவதும் அந்தக் குழுவினருக்குக் காவலராய் நின்றார். 

பின்னிரவு நேரத் தொழுகையான ‘தஹஜ்ஜுத்’-ஐ இருவருமாய் தொழுதுகொண்டிருந்தார்கள். அப்போது குழந்தை ஒன்று அழும் சத்தம் கேட்டது. 

ஜனாதிபதி உமர் கூட்டத்தினரை நெருங்கி குழந்தை அழாமல் பார்த்துக் கொள்ளும்படி அறிவுறுத்தினார். சிறிது நேரம் கழிந்தது. மீண்டும் அதே இடத்திலிருந்து குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்டது. 

ஜனாதிபதி உமர் குழந்தையின் தாயிடம் விரைந்து சென்றார். “அம்மா! இறைவனுக்கு அஞ்சிக்கொள்ளுங்கள். உங்கள் குழந்தையை அழாமல் கவனித்துக் கொள்ளுங்கள்!” என்றார். 

கொஞ்சம் நேரம்கூட ஆகியிராது. மீண்டும் குழந்தை அழும் சத்தம் கேட்டது.
ஜனாதிபதி குழந்தையின் தாயிடம் சென்று குழந்தை அழாமல் பார்த்துக் கொள்ளும்படி வலியுறுத்தினார். இப்படி மூன்று முறை நடந்தது. 

கடைசியாக, குழந்தை அழும் குரல் கேட்டு தாயாரிடம் சென்ற ஜனாதிபதி உமர், “அம்மா! நீங்கள் இரக்கமுள்ள ஒரு தாயாக ஏன் நடந்துகொள்ள மறுக்கிறீர்கள் என்பது தெரியவில்லை. இந்தக் குழந்தை இரவு முழுவதும் அழுதுக் கொண்டிருப்பதைப் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது!” என்றார்.
தன்னிடம் பேசிக்கொண்டிருப்பது ஜனாதிபதி என்று தெரியாமல் அந்தத் தாய் சொன்னாள்: 

“இறைவனின் அருள் உங்கள் மீது பொழிவதாக! இரவு பல முறை நீங்கள் தேவையில்லாமல் எனக்கு அறிவுரை என்ற பெயரில் வந்து தொந்தரவு செய்துவிட்டீர்கள். இந்தக் குழந்தை தாய்ப்பால் குடிப்பதை மறக்கடிக்க முயன்றுவருகிறேன். இந்தக் குழந்தையும் தாய்ப்பால் குடிப்பதை விட மாட்டேன் என்கிறது! நான் என்ன செய்ய?” என்று சலித்துக் கொண்டாள்.
இதைக் கேட்டு அதிர்ச்சியுற்ற ஜனாதிபதி உமர், “அம்மா, குழந்தையைக் கட்டாயப்படுத்தி பால்குடி மறக்கடிக்க வேண்டிய அவசியம்தான் என்ன?” என்று கேட்டார். 

“காரணமில்லாமல் செய்ய நான் கல்நெஞ்சம் கொண்டவளா? எங்கள் ஜனாதிபதி உமர் அவர்கள் பால்குடி நிறுத்திய குழந்தைகளுக்குத்தான் பைத்துல்மாலிலிருந்து (அரசு பொது நிதியகம்) நிதி உதவி செய்கிறார்கள்!”
“சரி.. இந்த குழந்தைக்கு வயதென்ன?” 

“குழந்தை பிறந்து சில மாதங்கள்தான் ஆகின்றன!” 

“குழந்தையைப் பால்குடி மறக்கடிக்க அவசரம் காட்ட வேண்டாமம்மா!” என்று சொல்லிவிட்டு ஜனாதிபதி உமர் அங்கிருந்து சென்றார். 

அதிகாலைத் தொழுகையை முன்னின்று நடத்திக்கொண்டிருக்கும் போதே ஜனாதிபதி உமருக்கு இரவில் நடந்த சம்பவம் நினைவில் வர, தொழுகையின் நடுவிலேயே அழ ஆரம்பித்தார். மேற்கொண்டு திருக்குர்ஆன் வசனங்களை ஓத முடியாமல் நா தழுதழுத்தது. ஒருவழியாகத் தொழுகையை நடத்திவிட்டு முடிவில் சொன்னார்: 

“உமர் அழிந்தான்! அவன் பச்சிளம் குழந்தைகளைக் கொன்று விட்டான்!”
அத்தோடு நில்லாமல் தமது ஆட்சிக்குட்பட்ட எல்லா பகுதிகளுக்கும் உடனடி ஆணையைப் பிறப்பித்தார். 

“குழந்தைகளுக்கான நிதி உதவி பெறும் பொருட்டு எந்தத் தாயும் குழந்தையைக் கட்டாயப்படுத்தி பால் குடியை நிறுத்தக் கூடாது! இனி, பால் குடிக்கும் குழந்தைகளுக்கும் அரசின் நிதி உதவி கட்டாயம் உண்டு!” 


 இஸ்லாம் வாழ்வியல்: இரவில் ஒலித்த அழுகுரல்
இக்வான் அமீர் 

 http://tamil.thehindu.com/society/spirituality/
 

Thursday, August 13, 2015

குரானை ரூ.5 கோடிக்கு விற்க முயன்ற 10 பேர் கைது

400 ஆண்டுகள் பழமை வாய்ந்த குரானை ரூ.5 கோடிக்கு விற்க முயன்ற 10 பேர் கைது 

  சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த குரானை ரூ. 5 கோடிக்கு விற்க முயன்ற 10 பேர் கொண்ட கும்பலை மைசூரு போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்ற‌னர்.

இது தொடர்பாக மைசூரு மாநகர காவல் கண்காணிப்பாளர் அபினவ்கர் செய்தியாளர்களிடம் கூறும்போது, கர்நாடகாவை சேர்ந்த ஒரு கும்பல் இஸ்லாமியர்கள் புனித நூலான குரானின் மிக பழமையான பதிப்பை, பல கோடிக்கு ரூபாய்க்கு விற்க முயற்சிக்கிறது. அந்த பழமையான குரான் குறித்து இணையதளத்தில் தகவல் வெளி யிட்டு, வெளிநாட்டுக்கு விற்கப்பட வாய்ப்பு இருக்கிறது என ஹைதராபாத் குற்றப்பிரிவு போலீஸார் கடந்த வாரம் தகவல் அளித்தனர்.

அதன் பேரில் மைசூரு கே.ஆர்.நகர் போலீஸார் அந்த மோசடி கும்பலை அணுகினர். அப்போது, இந்தியாவில் மிகவும் பழமையான இந்த குரான் தங்கத் தாளில் எழுதப் பட்டது. இதன் விலை ரூ. 5 கோடி எனக்கூறி, ஒரு வீடியோவையும் அனுப்பினர். அந்த வீடியோவை ஆராய்ந்த போது, மோசடி கும்பலிடம் இருக்கும் குரான் விலை மதிப்பற்றது என தெரிய வந்தது. இதையடுத்து அந்த கும்பலிடம் பேசி தனியார் விடுதிக்கு வரவழைத்தனர்.

அப்போது குரானை விற்க முயன்ற 10 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது புராதன பொருளை சட்ட விரோத மாக விற்க முயன்றது, மோசடி செய்தது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்துள்ளோம் என்றார்.

அந்த குரானை 93 வயதான வரலாற்றியல் ஆய்வாளரும், மங்களூரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தருமான பி. ஷேக் அலி ஆய்வு செய்தார். இது தொடர்பாக அவர், `தி இந்து' விடம் கூறியதாவது:

''என்னுடைய இத்தனை ஆண்டு கால அனுபவத்தில் இத்தகைய அரிதான குரானை பார்த்ததில்லை. 604 பக்கங்கள் கொண்ட இந்த குரான் தங்க முலாம் பூசப்பட்ட தாளில், கறுப்பு மையால் அரபி மொழியில் எழுதப்பட்டு இருக்கிறது.

ஒரு தேர்ந்த, அனுபவம் வாய்ந்த‌ எழுத்தர் 6 அல்லது 7 ஆண்டுகள் இதனை எழுதி இருக்கலாம். இந்த குரான் சாய்வு வடிவிலான எழுத்துக்களால் எழுதப்பட்டுள்ளது. இதில் 30 பாராக்களும், சம அளவுடைய 114 சுராக்களும் இடம்பெற்றிருக்கின்றன''என்றார்.  http://tamil.thehindu.com/india/400-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%825-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-10-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/article7537804.ece?homepage=true&relartwiz=true

இது தான் உண்மை !!!


 அடிமைகளாய் இருந்து உமய்யாக்களின் ஆட்சியின் போது, இஸ்லாத்தில் இணைந்த பின்  இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டவர்கள் மம்லுக்குகள். இவர்கள் 9 ம் நூற்றாண்டிலிருந்தே பல ஆட்சியாளர்களின் ஆட்சியில் இராணுவத்தில் பெரும் பதவிகளை வகித்தார்கள். குறிப்பாக அரசியலிலும், இராணுவத்திலும் இவர்கள் எகிப்து, லீவண்ட், ஈராக், இந்தியா போன்ற பகுதிகளில் தலையெடுத்தார்கள். தற்போதைய மத்திய ஆப்கானிஸ்தானிலிருந்த கோர் என்ற பகுதியை கஸ்னவித் ஆட்சியாளர் கஸ்னி முஹம்மதுவிடமிருந்து அபு அலி இப்ன் முஹம்மது வெற்றி பெற்று சுன்னிப்பிரிவு இஸ்லாமாக ‘குரித் ஆட்சிவம்சம்’ என்று துவக்கினார்.,,,


 இனி

http://islamiyaatchivaralaru.blogspot.in/

Tuesday, August 11, 2015

About இஸ்லாமிய பெண்மணி blog?

முஸ்லிம் பெண்களுக்கான சிறந்த தமிழ் பிளாக்.இஸ்லாத்தின் கொள்கைகள்,விளக்கங்கள்,முஸ்லிம் பெண்களின் ஆக்கங்கள் இன்னும் பல் சுவை கதம்பமாக மிளிர்கிறது,நீங்களும் படியுங்கள்,பிறருக்கும் எத்தி வையுங்கள் .


http://www.islamiyapenmani.com/

Monday, August 10, 2015

ஆண்மையுள்ள ஆனந்த விகடன்

 
 
 தண்டனை யாகூபுக்கு மட்டும் தானா ?
 
 
12-08-2015 தற்போதைய ஆனந்த விகடன் இதழில் தண்டனை யாகூப்புக்கு மட்டும்தானா? என்ற தலைப்பிட்ட ஆக்கம் உண்மையிலேயே பத்திரிகை தர்மத்தை காப்பாற்ற இன்னும் ஒரு சில பத்திரிகை இருக்கவே செய்கிறது என நமக்கு உணர்த்துகிறது.
 
 சரணடைந்த ஒருவருக்கு அரசு சொல்லும் பொய்யான குற்றச்சாட்டின் அடிப்படையில் மரண தண்டனை என்றால்


*9,000 கோடி அளவிற்கு இந்திய பொருளாதாரத்தை சீரழித்த , நூற்றுக்கணக்கான உயிர்பலியை ஏற்படுத்திய மும்பை கலவரத்தை நான்தான் தொடங்கி வைத்தேன் என தனது சாம்னா பத்திரிகையில் வெளிப்படையாக எழுதிய பால்தாக்கரே வுக்கு கடைசி வரை தண்டனை கொடுக்காமல் பாதுகாப்பு கொடுத்த இந்திய நீதி துறையை காரி துப்புகிறது


*2002 ஆம் ஆண்டு வரலாறு காணாத இஸலாமியர் படுகொலையை ஏற்படுத்திய குஜராத் கலவரத்தை தூண்டியவர் யார் ? அவர்களுக்கு என்ன தண்டனை ?
கேட்கிறது செவிடனாய் இருக்கும் இந்திய நீதித்துறையை.


*2006 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் மாலேகான் பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகையில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பை பற்றி அகப்பட்டுக்கொண்ட அசினாமந்தா வின் அத்தனை ஆதாரப்பூர்வமான பதில்களுக்கு பிறகும் ஏன் இன்னும் மரண தண்டனை விதிக்கவில்லை பிரக்யா சிங் பெண் ? சாமியாருக்கு ....


நாக்கை புடுங்கும் அளவிற்கு கேட்கிறது இந்திய நீதி துறையைநாட்டில் நடந்த பெரும்பான்மையான அனைத்து வன்முறை வெறியாட்டங்களுக்கும் காரணமான ஆர்.எஸ்.எஸ் , வி.எச்.பி , பக்ரஜ்தள் போன்ற அனைத்தையும் ஏன் தடை செய்யவில்லை என நியாயமான அனைத்து கேள்விகளுக்கும் பதிலில்லை இந்திய நீதி துறையில் ...நன்றி ஆனந்த விகடன்
///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
 
 http://www.adiraixpress.in/2015/08/blog-post_35.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+adirai+%28%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%29#.VcjrubUqMrc

Sunday, August 9, 2015

காக்கா வீட்டு பேரன்

சமீப காலங்களில் அண்ணலெம் பெருமானார் முஹம்மத் நபி ஸல் அவர்களின் தோழர்களின் பெயர்களை தங்கள் பிள்ளைகளுக்கு சூட்டி அழகு பார்க்கும் பல நிகழ்வுகள் நடந்து வருகின்றன.உண்மையில் இது மிக மெச்சப்பட வேண்டிய ஒரு செய்தியாகும்.

முதலில் சஹாபாக்கள் என்போர் யார்? அவர்களின் தியாகங்கள் என்ன?போன்ற விஷயங்களை ,அவர்களின் உன்னதமான தியாகமான வரலாற்றை நாம் ஒவ்வொருவரும் இன்ஷா அல்லாஹ் படிக்க வேண்டும்,இதன் மூலம் நம் ஈமான் அதிகரிக்க வாய்ப்புண்டு.


நம் குழந்தைகளுக்கு சினிமா நடிகர்,நடிகைகளின் பெயரை வைத்து,அவர்களை,அந்தக் கூத்தாடிகளை நம் குழந்தைகளுக்கும்,நம் சமுதாயத்துக்கும் அறிமுகப்படுத்தி,சேவை செய்யும் சில தாய் தந்தையர் இருக்கத்தான் செய்கின்றனர்.

அவர்கள் திருந்தி,அப்பெயர்களை மாற்றி,தத்தம் குழந்தைகளுக்கு சஹாபாப் பெருமக்கள்,இமாம்கள் போன்றோர்களின் பெயர்களை  வைக்க வேண்டும்,தங்கள் குழந்தைகள் கூத்தாடிகளின் பெயர்களை தாங்கிக் கொண்டு திரியாமல்,அந்த அநாகரிக செயல்களுக்கு விளம்பரம் தேடித் தராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மிக அவசியமாகும்.இல்லையெனில்,சமுதாயத்தின் ஒழுங்கீனத்துக்கு அவர்கள் மறைமுக வேலை பார்க்கிறார்கள் என்பதில் ஐயமில்லை.

சஹாபாப் பெருமக்கள்,இமாம்கள் பெயரை வைத்தால்,- அந்தக் குழந்தையின் பெயரை சொன்னாலே,அது அந்த உன்னத சஹாபியின் பெயர் நிழலாடி,அவர்களின் வரலாறு நினைக்க தோன்றும்,அல்லது அன்னவர்களின் வரலாற்றை படிக்கத் தோன்றும்.

என் காக்காஅவர்களுக்கு மகள் வழி பேரன் பிறந்திருக்கிறான்.மு ஆத் என பெயர் வைத்திருக்கிறார்கள்.அந்தப் பேரனை பார்க்கும் போதும்,கொஞ்சும் போதும் ,இயற்கையாகவே ரலி என்று சேர்த்து சொல்லவே மனம் நாடுகிறது,அத்துடன் அந்த சஹாபியின் வரலாறு நெஞ்சம் நனைக்கிறது,இன்னும் அவர்களின் வரலாறு படிக்கத் தோன்றுகிறது.இதன் மூலம்,அந்த உன்னத சஹாபியின் பெயர் மூலம்,அவர்களின் தியாகம் இன்னும் பரவ வழி ஏற்படுகிறது.இது கூட ஒரு சைகாலஜி போன்ற ஒரு விடயமாகவே நான் கருதுகிறேன்.ஒரு நடிகனை,நடிகையை ,நம் பிள்ளைகளுக்கு பெயர் இட்டு,அவர்களின் கேவலமான வாழ்கையை விளம்பரப்படுதுவதன் மூலம்,அசிங்கமான செயல்கள் எல்லாம்,அங்கீகாரம் அடைந்து விடுகின்றன.இது சமுதாயத்தில் மறைமுக ஆபத்தை விளைவிக்கும்.

ஆனால்,இப்படி சஹாபாப் பெருமக்கள்,இமாம்களின் பெயர்கள் மூலம் ,அவர்களின் தியாகம்,ஒழுக்கம் நினைவு கூறப் பட்டு,சமுதாயம் சீர் படுகிறது.
எனவே,இது விஷயத்தில் நாம் கவனம் செலுத்தி,சஹாபாக்களின் மாண்புதனை இன்னும் உலகம் அறிய செய்வோம்,இன்ஷா அல்லாஹ்.


Saturday, August 8, 2015

அமெரிக்க அதிரை கூட்டமைப்பும் ,அதன் முக்கியத்துவமும்...

சென்ற வாரம் ஞாயிற்றுக் கிழமை அதாவது ஆகஸ்ட் இரண்டாம் தேதி,அமெரிக்க வாழ் அதிரைக் கூட்டமைப்பின் ஒன்று கூடல் ஒன்று கலிபோர்னியா மாநிலத்தின் வல்லெஹோ என்ற ஊரின் ஒரு பூங்காவில் நடந்தேறியது.

பொதுவான,ஒரு நிகழ்வாக அது நடந்து இருப்பின்,அதைப் பற்றிய செய்திகளை பரிமாறும் எண்ணம் வந்து இருக்காது.ஆனால்,அங்கு வந்து கூடி இருந்த மக்கள் அனைவரும் அதிரை மக்களின் மீதான ஒரு கரிசன உணர்வுடன் கூடிப் பேசி இருந்ததைக் கண்டவுடன்,பகிரவேண்டும் என்ற நல எண்ணம் ஏற்பட்டதில் வியப்பில்லை தானே.

அமெரிக்காவைப் பொறுத்தவரை அங்கு வாழும் அதிரை முஸ்லிம் மக்கள் அனைவரும் எவ்வித தெரு வேறுபாடும் இல்லாமல்,எந்த சங்கத்துக்கும் கொடி பிடிக்காமல்,ஒன்று பட்ட ஒரே அமைப்பாக இருக்கிறார்கள்.எந்த ஒரு தெருவுக்கும் இங்கு அமைப்புக்கள் இல்லை.அனைவரும் அமெரிக்கன் அதிரை போரம் என்ற அமைப்பின் கீழ் ஒற்றுமையாக செயல் பட்டுக் கொண்டுள்ளனர்.இது வேறு எங்கும் காணக் கிடைக்காத ஒரு அறிய நிகழ்வாகும்.

வளைகுடா நாடுகளில் உள்ள எந்த நாட்டையும் எடுத்துப் பார்ப்போம் என்றால்,அங்கெல்லாம்,முஹல்லாகள் முஹல்லாக்களாக பிளவு பட்டு,தெருவுக்கு ஒரு சங்கமாக பிரிந்து கிடக்கிறார்கள்.ஆஸ்திரேலிய,பிரிட்டன் போன்ற நாடுகளின் கதியும் இதுதான்.

குறிப்பிட்ட இந்த தெரு வாசிகளின் கூட்டம் நடை பெற உள்ளதால்,குறிப்பிட்ட அந்த தெரு வாசிகள் கலந்து கொள்ள வேண்டும் என்று விளம்பரங்கள் வருகின்றன.

ஆனால்,அமெரிக்காவின் நிலையே வேறு,இங்கு அதிரைவாசிகளே கலந்து கொள்ளுங்கள் என்றுதான் விளம்பரங்கள் வரும்.

அதேயே,கூட்டத்தில் ஒருவராக கலந்து கொண்ட சவூதி ஐடாவின் முன்னாள் தலைவர்,ஆபிதீன் காக்கா அவர்கள்,இதை ஒரு யுனிக் என்று குறிப்பிட்டு பாராட்டினார்கள்.

இன்ஷா அல்லாஹ்,இது இனியும் தொடர வேண்டும் என்பதே நம் அவாவும்,துவாவும். 

Friday, August 7, 2015

மரைக்காயர் பிரியாணி,அட-இது நம்ம பிரியாணிNEW STORE OPEN IN CHENNAI

 சென்னை வாழ் அதிரையர் சுஹைப் இன்று அமைந்தகரையில் PERFUME GALLERY புதிய தொழில் நிறுவனத்தை இன்று மாலை தொடங்கியுள்ளார்

.இந்நிறுவனத்தில் அணைத்து வகையான வெளிநாட்டு வாசனை திரவியங்கள் ,சாக்லேட் வகைகள் ,பரிசு  பொருட்கள் ,கடிகாரங்கள் விற்கப்படுகிறது .

PLEASE SUPPORT


Monday, August 3, 2015

குர்ஆனை கற்றுக் கொள்ளட்டும், யூத அறிஞர்


“அவர்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு குர்ஆனையும் ஹதீஸையும் படிக்கட்டும்” - இது இஸ்ரேல் நாட்டில் புகழ்பெற்ற  ஆர்த்தோடாக்ஸ் மதருகுருவான ( Rabbi Menachem Froman) ரப்பி மெனாகம் ஃபுரோமனின் அறிவுரை. அமெரிக்க வெளியுறவுத் துறையில் பணியாற்றுகின்ற அதிகாரிகளை பார்த்துதான் இந்த அறிவுரையை வழங்கியுள்ளார். இஸ்லாத்தின் ஆதார நூல்களைப் பற்றிய அடிப்படை அறிவு இல்லாததால்தான் அந்தத் துறை இஸ்லாத்தைப் பற்றிய தவறான கருத்துக்களை வெளியீட்டு வருகிறது என்பதே ஃபுரோமனின் கருத்து.

இதற்க்கு ஒரே தீர்வுதான் உள்ளது. அந்த அதிகாரிகள் குறைந்தபட்சம் ஓராண்டாவது விடுமுறை எடுத்து குர்ஆனையும் ஹதீஸையும் படிக்கட்டும். இஸ்லாம் மாபெரும் ஆன்மீகக் கடல் என்பதையும் அதிலிருந்து நிறைய கற்க வேண்டியுள்ளது என்பதையும் அப்போது அவர்கள் விளங்கிக் கொள்வார்.

மேற்கத்தியர்களும் யூதர்களும் முஸ்லிம்களிடம் அவமரியாதையுடன் நடந்து கொள்வதே பிரச்சனைக்குக் காரணம். ஆணவத்தின் மொழியில் அவர்கள் பேசுகின்றனர். அவர்கள் அமைதியை விரும்பினால் முஸ்லிம்களை நெருங்கிச் சென்று அவர்களைப் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார் ஃபுரோமன்.

ரஷ்ய வார இதழான ‘எக்ஸ்பெர்ட்டு’க்கு அளித்த நேர்காணலில் 63 வயதான ஃபுரோமன் தனது கருத்துக்களை மனம் திறந்து வெளியிட்டுள்ளார். இவர் பலமுறை முன்பு யாசிர் அரஃபாத்தை சந்தித்து அமைதித் திட்டத்திற்காக முயன்றவர் என்பது குறிப்பிடதக்கது. அரசியல் தீர்வை விட  ஆன்மீகத் தீர்வைக் குறித்தே அவர் வலியுறுத்தி வந்தார். ஜெருசலம் யாருக்கு என்பதுதான் மோதலுக்கான முக்கியக் காரணம் என்பதால் அந்தப் புனித நகரத்தை யூத,கிறிஸ்தவ, இஸ்லாமியர் அனைவருக்கும் சொந்தமாக்கி உலகத்தின் தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என்பது இவரது பரிந்துரை.

http://valaiyukam.blogspot.com/2015/08/blog-post_3.html

Tuesday, June 23, 2015

வேண்டுகோள்

அஸ்ஸலாமுஅலைக்கும் ( வரஹ்) அதிரையைச்  சேர்ந்த சகோததர் ஒருவர் அவர் சக்திக்கு மீறிய கடனில் இருக்கிறார். கடன் நெருக்கடி அதிகமாகிவிட்ட நிலையில் வேறு வழியற்று ஜகாத் கோருகிறார்
அவர் தன்னை வெளிக்காட்டி கொள்ளமுடியாத தர்மசங்கடமான நிலையில் கீழ் கானும் வங்கி எண்ணில் செலுத்தினால் அவர் கடன் அடைக்கப்படும். மேலும் கடன் போக இருக்கும் மீதமுள்ள பணத்தை தேவையுடையவர்களுக்கு அளித்துவிடுவார். இன்ஷாஅல்லாஹ்
State bank of India
Hidayathullah.ar
A/c No: 31824538849
Adirampattinam branch
Branch code: 14370
இயன்ற வரை சேர் செய்யுங்கள்
தகவல் உண்மை என்ற நிலையில், என் கணக்கு எண் கொடுத்து உதவுகிறேன்.
ஹிதாயத்துல்லாஹ். அர
8148480807

Monday, January 5, 2015

மக்களே! ஒரு உதவி வேண்டும்,இறை கூலி கிடைக்கும்!!

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1984 ம் ஆண்டு முதல் 2008 ம் ஆண்டு வரை 24 ஆண்டுகள் 'நீதி போதனையை' கற்பிக்கும் ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் என்.எஸ் ஜமால் முஹம்மது ( வயது 74 ). 'ஹஜரத்' என அனைவராலும் அன்புடன் அழைக்கப்படுபவர். பணியின் போது பள்ளி நிர்வாகம் வழங்கி வந்த சொற்ப சம்பளத்தில் குடும்பம் நடத்தி வந்தார். இவரது குடும்பம் முத்துப்பேட்டை முகைதீன் பள்ளி தெருவில் அமைந்துள்ளது.

பணிபுரியும் காலத்தில் தினமும் முத்துப்பேட்டையிலிருந்து அதிரைக்கு பேருந்தில் வந்துவிட்டு செல்வார். அப்போது தான் பெற்றுவந்த சம்பளம் போதுமானதாக இல்லையென்றாலும், இருந்ததைக் கொண்டு சிக்கனமாக குடும்பம் நடத்தி வந்தார். எளிமையானவர் அனைவரிடமும் இன்முகத்துடன் பழகக்கூடியவர். தனது மாணவர்களை கண்டால் முதுகில் தட்டிக்கொடுத்து நலம் விசாரிப்பார்.

நீதி போதனை வகுப்பின் போது இவர் கூறும் 'இஸ்லாமிய வரலாற்று 'சம்பவங்கள்', தொழுகை குறித்து விளக்கங்கள், நபி ( ஸல்) வாழ்வில் நடைபெற்ற படிப்பினை சம்பவங்கள், ஒழுக்க நெறிமுறைகள் உள்ளிட்ட பலவற்றை சுவாரஸ்யமாகவும் எளிதாக புரியும்படியும் கூறுவதில் வல்லவர். வாரம் ஒரு முறை நடக்கும் நீதி போதனை வகுப்புக்காக மாணவர்கள் எதிர்பார்ப்புடன் இருப்பதும் உண்டு. இவர் கற்பிக்கும் சூராக்களை முன்னாள் மாணவர்களிடம் ஒப்பிக்க சொன்னால் இன்றும் அப்படியே ஒப்பிப்பார்கள்.

இவரிடம் நீதி போதனைகளை கற்ற பல மாணவர்கள் பல்வேறு நாடுகளில் பல்வேறு பொறுப்புகளில் பணிபுரிந்து வருகின்றனர். தாயகம் திரும்பிய பல மாணவர்கள் ஹஜரத்தை சந்திக்கும் வாய்ப்பு அமைந்தால் மரியாதையுடன் நலம் விசாரித்துவிட்டு செல்வதும் உண்டு.

இவர் தற்போது முத்துப்பேட்டை முகைதீன் பள்ளி பின்புறமுள்ள தனது வீட்டில் வசித்து வருகிறார். கடந்த மாதங்களுக்கு முன்பு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் இவருக்கு இருதய வால்வில் இரு இடங்களில் அடைப்பு உள்ளது எனவும், இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளனர். இதன் பிறகு திடீரென ஒரு நாள் இவரது பேச்சிலும் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. பேச்சில் உளறல் ஏற்பட்டது. இதன் பிறகு தீவிர மருத்துவ சிகிச்சைக்கு பிறகு தற்போது ஓரளவு பேசி வருகிறார்.

மூட்டு வலியுடன் அவதிப்படும் இவர் தற்போது முழு ஓய்வில் வீட்டில் இருந்து வருகிறார். நாற்காலியில் அமர்ந்துதான் தொழுது வருகிறார். பள்ளிவாசல் - வீடு ஆகிய இரண்டு இடங்களை தவீர வேற எங்கும் செல்வதில்லை. இவரது மனைவி சிறுவர் சிறுமிகளுக்கு குரான் ஓத கற்று கொடுத்து இதன் மூலம் பெரும் சொற்ப தொகையில் குடும்பம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மஹபூப் அலி அவர்களும், நானும் ( சேக்கனா நிஜாம் ) ஹஜரத்தை கண்டு நலம் விசாரிப்பதற்காக முத்துப்பேட்டையில் உள்ள இவரது இல்லத்திற்கு நேற்று சென்றோம். இவரது நிலைமை அறிந்து வருந்தினோம். அப்போது தலைமை ஆசிரியர் மஹபூப் அலி சிறு தொகையை உதவியாக ஹஜரத்திடம் வழங்கினார்.

இவரது மருத்துவ சிகிச்சைக்காக நிதி தேவைப்படுகிறது. நம்மின் உதவியை எதிர்பார்த்துள்ளார். இவருக்கு நாம் தாராளமாக உதவுவதன் மூலம் நம் அனைவரும் இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ்வின் நற்கூலியை பெறுவோம்.

மேலதிக விவரங்கள் தொடர்புக்கு:
0091 9442038961 / 8220378051

நிதி உதவி கோரி ஹஜரத் நம்மிடம் வழங்கிய வங்கி கணக்கின் விவரம்:
N.S JAMAL MOHAMED
S/O. N.E. SHAHUL HAMEED
NO. 35,  MOHAIDEEN PALLI STREET
INDIAN OVERSEAS BANK
MUTHUPET BRANCH
SB A/c No. 122601000006760

குறிப்பு : ஹஜரத்துக்கு உதவ எண்ணுகின்றவர்கள், நேரடியாகவோ அல்லது இணைப்பில் குறிப்பிட்டுள்ள வங்கி கணக்கின் வழியாகவோ அல்லது இணைப்பில் குறிப்பிட்டுள்ள அலைப்பேசி  மூலம் தகவல் பெற்றுக்கொண்டு உதவலாம்.

சேக்கனா நிஜாம்

http://www.adirainews.net/2015/01/blog-post_10.html

Sunday, January 4, 2015

உடலைக் கடைவிரித்துதான் உலகை வெல்ல வேண்டுமா?

திறந்து கிடப்பதுதான் சிறந்தது என்றால்
அந்தச் சிறப்பு எம் பெண்டிர்க்குத் தேவையில்லை!

கணவன் காண வேண்டியதைக்
கண்டவனும் காண்பதுதான் சுதந்திரம் என்றால்
என் மனைவி அடிமையாகவே இருக்கட்டும்!

வரைமுறையற்று வாழ்வதுதான் பெண்ணியம் என்றால்
என் சகோதரிக்குப் பெண்ணியம் வேண்டாம்!

உடலைக் கடைவிரித்துதான் உலகை வெல்ல வேண்டுமா?
இல்லை என்பதற்கு அன்னை தெரசா அற்புதச்சான்று!

திறந்து கிடக்கும் பண்டத்தை
ஈக்கள்தான் மொய்க்கும்!

மூடித்திறந்த மலர்களையோ
தேனீக்கள் கூட்டம் மொய்க்கும்!

மேகம் மறைத்தால்தான் வானம் அழகு!
மோகம் மறைத்தால்தான் காதல் அழகு!

சிப்பிக்குள் இருப்பது முத்தின் அருமை!
அங்கம் மறைப்பதில்தான் பெண்ணின் பெருமை!

ஹிஜாப் என்பது அடிமைத்தனத்தின் அடையாளமல்ல;
அது ஓர் அருட்கொடை!

ஓராயிரம் கோடிப் பார்வைகளாயினும்
உட்புக விடாமல் காக்கும் கவசம்!

அபுல் ஹசன் R
9597739200

http://www.satyamargam.com/articles/arts/lyrics/2461-hijab-is-blessed-gift.html

ஐ.டி. நிறுவனங்களின் அக்கிரமங்கள்: இப்படி பண்றீங்களேம்மா!

 எல்லா கதைகளுக்கும் ஒரு தொடக்கம் இருக்கும். ஐ.டி நிறுவனங்களைப் பற்றி நான் முதலில் புரிந்துகொள்ளத் தொடங்கியது கல்லூரியின் நான்காம் வருடத்தில்தான்.

கேம்பஸ் இண்டர்வியூவுக்கு பல கனவுகளுடன் ஐ.டி நிறுவனங்களின் செயல்பாடு எப்படி? எந்தெந்த டெக்னாலஜியில் நம்மை வளர்த்துக் கொண்டால் உதவிகரமாக இருக்கும் என்றெல்லாம் நாங்கள் தேடித் தேடி படித்து வந்தோம். சரி, இப்போது இதுதான் நமது பாதை என்று ஆகிவிட்டது; இனி இந்த பயணத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என்றெல்லாம் முன்பே சிலர் சிந்திக்கத் தொடங்கினர்.

கல்லூரி காலம் முடியும் முன்னரே நிறைய பேருக்கு நிறுவனத்தில் சேர்வதற்கான அழைப்புக் கடிதம் (Call Letter) வந்தது.

ஜூலை மாதத்தின் கடைசியில் வரிசை வரிசையாக நண்பர்கள் சேரத் தொடங்கினர். ஆகஸ்ட் மாதத்தில் எனது பயணமும் தொடங்கியது, ஆனால் கால் லெட்டருக்குக் காத்திருந்தபடியே சில நண்பர்கள் தங்கள் நாட்களை கடத்தினர்.

முதலில் 'நீங்க என்னடா அதுக்குள்ள வேலைக்கு சேர்ந்துடீங்க கொஞ்ச வாழ்க்கையையும் வாழுங்க' என்றெல்லாம் கேலி செய்து வந்தனர். நாட்கள் நகர நகர எனது ட்ரெய்னிங் முடிந்தது, ப்ராஜெக்ட்டிற்காக நான் காத்திருந்த நாட்களில் எனது நண்பன் அவனது கால் லெட்டருக்காகக் காத்திருந்தான்.

பெஞ்ச் படலம்

டிசம்பர் மாதம் ஐ.டி. நிறுவனங்களின் இலையுதிர் காலம் வெளிநாட்டில் எங்கும் கிறிஸ்துமஸ், நியூ இயர் கொண்டாட்டம் என்பதால் ப்ராஜெக்ட் கிடைப்பது குதிரைக் கொம்புதான். இருந்தாலும் தினந்தோறும் அலுவலகம் வந்தபடி வாய்ப்புகள் தேடிக் காத்திருந்தேன் நண்பர்களுடன்.

இந்தக் காத்திருக்கும் படலத்தின் பெயர் 'பென்ச்' (Bench). ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில் ப்ராஜெக்ட்டும் கிடைத்தது. அன்றும் நண்பன் தனது ப்ராஜெக்டிற்காக காத்திருந்தான். கல்லூரியில் பயோ டெக்னாலஜி படித்த அவன் கேம்பஸ் இன்டர்வியூ'வில் மூன்று நிறுவனங்கள் நடத்திய இன்டர்வியூவையும் அசத்தி ஒரே நாளில் மூன்று வேலைகளை வாங்கினான். மூன்றில் ஒன்று எடுக்க வேண்டிய தருணம் அன்று.

ஐ.டி. நிறுவனத்தில் வேலைப் பார்க்கச் சென்றாலும் தான் படித்த படிப்பு வீண்போகக் கூடாது என்பதில் குறியாக இருந்தான். மற்ற இரண்டு நிறுவனங்களை காட்டிலும் 'அச்சில்' நிறுவனத்தில் சம்பளம் சற்று குறைவுதான் என்றாலும் தான் படித்த படிப்பை இணைக்கும் வகையில் ஐ.டி.யில் லைஃப் சயின்ஸ் பிரிவில் வேலைப் பார்க்கிற வாய்ப்பு என்கிற ஒரே காரணத்திற்காக, அச்சில் நிறுவனத்தில் வேலை செய்வதாக உறுதி கொடுத்தான். அவனுடன் சேர்த்து 2012 ஆம் ஆண்டு அச்சில் நிறுவனத்தில் வேலை கிடைத்த பலருக்கும் அந்த வருடத்தில் 'கால் லெட்டர்' வரவில்லை.

காலாவதியான கால் லெட்டர்கள்

நான் வேலைக்கு சேர்ந்து ஒரு வருடமானது. அப்போது வரை நிறுவனத்திலிருந்து அவனுக்கு எந்த பதிலும் கிடைக்காமல் இருந்தது. நாட்கள் காத்திருப்பை அதிகரித்துக் கொண்டே வந்தன. இந்த முடிவை எடுத்திருக்கக் கூடாதோ? என்கிற வருத்தம், நண்பர்கள் எல்லாம் வேலைக்கு போகும்போது என்னால் போக முடியவில்லையே என்ற விரக்தி, இன்று வந்திடுமோ நாளை வந்திடுமோ இப்படி ஐயத்திலே ஒவ்வொரு நாளும் காத்திருப்பில் கடந்தது.

அந்த வருடத்தில் கால் லெட்டர் கிடைத்த சிலருக்கும் கால் லெட்டர் வந்துவிட்டதால் உங்கள் அனைவருக்கும் வேலை நிச்சயம் என்று கிடையாது. 'ஒரு தேர்வு எழுத வேண்டும். அதில் வெற்றி பெறுபவர்கள் மெரிட் அடிப்படையில் அழைக்கப்படுவார்கள். மற்றவர்களைப்பற்றி நாங்கள் பின்பு கூறுவோம்' என்று நிறுவனம் உரைத்த செய்தி அந்த வருடத்தில் சேர்ந்த பல ஊழியர்களை பாதித்தது.

இனிமேலும் காத்திருந்து என்ன நடக்கப் போகிறது? இந்த ஐ.டி'லாம் நமக்குப் பகல்கனவு தான். இனியும் காத்திருப்பதில் பயன் ஏதும் இல்லை என்கிற சிந்தையில் பேங்க் தேர்வு எழுதி வெற்றி பெற்று கிளெர்க்காக வேலைக்குச் சேர்ந்தான்.

சவுக்கடி மின்னஞ்சல்

நான்கு வருடம் பொறியியலை காதலுடன் படித்தவனுக்கு படித்த படிப்பிற்கு ஏற்ற வேலைப் பார்க்கவில்லையே என்கிற வருத்தம். 2012 ஆம் ஆண்டு வேலைக்கு சேர வேண்டியவனுக்கு ஏறத்தாழ ஒன்றரை வருடங்கள் கழித்து நிறுவனத்திடம் அழைப்புக் கடிதம் வந்தது:

'வாழ்த்துக்கள் நீங்கள் அடுத்த மாதம் எங்கள் நிறுவனத்தில் சேர்ந்து கொள்ளலாம். ஒருவேளை உங்களுக்கு இந்த வேலையில் சேர விருப்பம் இல்லை என்றால், உடனடியாக இரண்டு நாட்களுக்குள் சொல்லி விடவும்' என்று அக்கடித்தில் எழுதப்பட்டிருந்தது.

அதைப் படித்து அமைதியாக தான் எடுத்த முடிவு தான் சரி என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டான். இதே கடித்ததை பெற்ற என் தோழி ஒருத்தி இதைக் கண்டு வெகுண்டெழுந்தாள் 'ஒன்றரை வருடங்கள் ஆகிறது, எனக்கு உங்கள் நிறுவனத்தில் வேலை கிடைத்ததே மறந்து போச்சு. இன்று உங்கள் கடிதத்தை கண்டதும் என்னால் ஜீரணிக்க முடியவில்லை. நாங்கள் உங்களுக்காக வருடங்களாக காத்திருக்கிறோம்... உங்களால் உங்களது மெத்தனத்திற்கு ஒரு மன்னிப்பு கூட கேட்க முடியாதா? எத்தனை திறமைசாலிகளின் கனவை நீங்கள் உடைத்துள்ளீர்கள் என்று தெரியுமா? எவ்வளவு ஏழை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று உங்களுக்கு தெரியுமா? அது என்ன இரண்டு நாட்களுக்குள் பதிலை சொல்லு என்று கெடு விதிக்கின்றீர்கள்? எங்களது மின்னஞ்சல்களுக்கு பதில் சொன்னீர்களா? அழைப்புகளுக்கு பதில் சொன்னீர்களா? இருந்தாலும் நான் உங்களுக்கு பதில் சொல்கிறேன் 'பங்குச் சந்தையில் உங்கள் நிறுவனத்தின் நிலை என்னவென்று எனக்குத் தெரியும். மீண்டும் உங்களது பங்குகள் இறங்குவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது; அப்படி கீழிறங்கும் பட்சத்தில் என்னைப் போன்றவர்களை வேலையிலிருந்து நீக்குவதற்கு நீங்கள் கொஞ்சமும் தயங்கமாட்டீர்கள் என்று நான் நன்கு அறிவேன். மனிதர்களை மதிக்கத் தெரிந்த ஒரு நிறுவனத்தில் நான் இப்போது வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன். மனிதாபிமானமற்ற உங்கள் நிறுவனத்தின் வேலை எனக்கு நிச்சயம் வேண்டாம். இதை நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும் கொண்டு செல்லுங்கள், எனக்குக் கவலையில்லை' என்று சவுக்கடி வரிகளில் ஒரு மின்னஞ்சல் அனுப்பினாள்.

தமிழகத்தில் அமைந்துள்ள சேவை சார்ந்த ஐ.டி நிறுவனங்கள் பலவும் மனித உயிர்களை ஒரு பொருட்டாகவே கண்டுகொள்வதில்லை.

நாங்க இருக்கோம்

'ஆமாண்ணா.. இங்க வாங்க.. அவர் சொன்னத நாம எப்படி மூணு மாசத்துக்குள் முடிக்கறது? இதுல இருக்குற வேலையை பார்த்தா டெவெலப்மென்ட், டெஸ்டிங் எல்லாம் சேர்த்து குறைந்தது ஐந்து மாதங்கள் ஆகுமே!' என்று நண்பன் ஒருவரிடம் கேட்டான். அவர் 'இல்லைடா, அது மூன்று மாசம் இல்லை இன்னும் இரண்டு மாசத்துக்குள் முடிக்கணும். ஆமா, என்னை ஏன் நீங்க அண்ணான்னு கூப்படறீங்க? நானும் உங்க பேட்ச் தான், இந்த ப்ராஜெக்டல நாங்க மூணு மாசமா வேலை செய்யறோம். அப்பவே இத முடிக்க ஒரு வருஷம் ஆகும்ன்னு ஒருத்தர் சொன்னாரு. அது இப்போ தான் இவங்களுக்கு புரிஞ்சிருக்கு. இன்னும் இரண்டு மாசத்துல முடிச்சாகணும்னு புடுங்கறாங்க. நான் மூணு வாரமா இங்கயே இரண்டு மணி வரைக்கும் வேலை பார்க்கிறேன். சில சமயத்துல 48 மணி நேரம் தொடர்ந்து வேலைப் பார்க்கிற மாதிரி ஆகுது.. சன்டேவும் எங்களுக்கு விடுமுறை கிடையாது' என்றார்.

'இப்போ தான் இந்த வேலை முடிக்க ஆள் தேவைன்னு உங்களலாம் சேர்த்திருக்காங்க, காசாகும்.. ப்ராஜெக்ட் பட்ஜெட்ன்னு சொல்லி சீனியர்களையும் சேர்க்கல. இந்த மேனேஜர்க்கும் டெக்னிகலா எதுவும் தெரியல. எதாவது வடை சுட்டு முடித்துக் கொடுக்கிறோம்ன்னு வாக்கு கொடுத்திடராறு. அதுக்கு ஏற்ற மாதிரி ஆளுங்களையும் எடுக்கணும்.'

'சரி எதுக்கு பாஸ், இப்படிலாம் கஷ்டப்படறீங்க? உங்க பிரச்சினைய HR - Human Resource (மனிதவளம்) பார்வைக்கு கொண்டு போக வேண்டியதுதானே?' என்றேன்.

'பாஸ் அதுலாம் உங்களுக்கு தான் நான் பச்சை டாக் (Green Tag) போட்டிருக்கேன் உங்கள மாதிரி ப்ளூ டாக் (Blue Tag) போடலை. நாங்கலாம் டெம்ப்ரவரி வொர்க்கர். இங்க இரண்டு வருஷம் இப்படி வேலை பார்த்தாதான் இந்த மேனேஜர் ரெகமெண்ட் செய்து எங்களை பெர்மனேன்ட் ஆக்குவாறு!' என்று பதில் வந்தது.

ஏன் பாஸ் நீங்க இன்ஜினியரிங் படிக்கலியா? என்றேன். 'இல்லை பாஸ் நான் பீ.ஈ. கம்ப்யூட்டர் சைன்ஸ் தான். நான் ரூரல்ல (Rural) படிச்சேன் நான் படிச்ச கல்லூரியில கேம்பஸ் ப்ளேஸ்மென்ட் கிடையாது. வேலை தேடி அலைஞ்சி பாருங்க அப்போ உங்களுக்கு தெரியும் ஒரு வேலை வாங்கறர்து எப்படின்னு! நாங்கலாம் உங்களுடைய இப்போதைய லெவல் தொடுவதற்கு இரண்டு வருஷமாவது கடினமாக உழைக்கணும். அப்போ கூட இவங்க என்ன செய்வாங்கன்னு தெரியாது.

பரீட்சை எனும் வேலி

என் உறவினர் வேலை பார்க்கும் மற்றொரு பிரபலமான ஐ.டி நிறுவனத்தில் பி.எஸ்.சி படித்தவர்களை பொறியியளார்கள் பணியில் அமர்த்தி பணி நேரத்திற்கு பிறகு ட்ரெய்னிங் அளிக்கின்றனர். விடுமுறை நாட்களில் அவர்கள் புகழ்பெற்ற கல்லூரியில் ஆன்லைன் முறையில் தேர்வுகள் எடுத்து வார முடிவுகளில் வகுப்புகளில் பங்குபெற்று கம்ப்யூட்டர் சயின்ஸ்சில் முதுகலை படித்து முடிக்க வேண்டும். அப்படி படித்து முடித்தால் மட்டுமே அவர்களால் இருபதாயிரத்தை பார்க்க முடியும்.

பாட அமைப்பு அவர்களை குறைந்த பட்சம் மூன்று வருடமாவது படிக்க வைக்கும்படி அமைந்திருக்கும். மூன்றாம் வருடத்தின் இறுதியில் சுமார் அறுபது சதவீத மக்கள் தான் தேர்ச்சி பெறுவார்கள். மீதமுள்ளவார்கள் மீண்டும் படிக்க வேண்டும். அப்போது தான் நிரந்தரமாக்கப்படுவார்கள்.

இது ஒருவகையான நூதனமான திருட்டு இது. 'ஒரு மனித வளத்திற்கு குறைந்தது ஒரு லட்ச ரூபாய் வெளிநாட்டு வாடிக்கையாளரிடமிருந்து கட்டணம் வாங்குகிறார்கள். அதுவும் பொறியியல் படித்து கேம்பஸ் இன்டர்வியுவில் வேலைக்கு வரும் ஊழியனுக்கு குறைந்தது இருபதாயிரம் அளிக்கப்பட வேண்டும் என்பதால் அவனுக்கு பதிலாக ஒரு பி.எஸ்.சி படித்தவனை எடுத்தால் பத்தாயிரம் கொடுத்தால் போதுமானது. அதுவும் இந்த முதுகலை படித்து முடிக்கும் வரை அவன் வேறு நிறுவனங்களைத் தேட மாட்டான். அதுவரை அவனுக்கு அளிக்கும் சம்பளமும் நிறுவனத்திற்கு பெரிய லாபத்தைத் தான் அளிக்கப் போகிறது என்கிற எண்ணம்.

ரிசோர்ஸ் கட் டவுனின் (Resource Cut Down) பின்புலம்

இந்த அநியாயங்களின் அடுத்த உச்சம் தற்போது தேநீர்சிஸ் நிறுவனத்தில் நடந்து வரும் ரிசோர்ஸ் கட் டவுன் (Resource Cut Down). தற்போது நிறைய பேரை வேலையை விட்டு நீக்கியதற்கு, அவர்கள் சரியாக வேலைப் பார்க்காத காரணத்தால் நிறுவனம் இந்த நடவடிக்கையினை எடுத்துள்ளதாக கூறுகிறது. இது உண்மை தானா? சற்று உற்று நோக்குவோம்.

நீக்கப்பட்டவர்கள் யார்?

முதலில் வேலையில் ஒருவன் புதிதாக சேர்கின்றபோது அவனுடைய போஸ்ட் 'Trainee' எனப்படும். அதன் பின் படிப்படியாக அவன் நிறுவனத்திற்கு பங்களிக்கின்ற விதம், அவனது பதவியை மேல் எடுத்துச் செல்கிறது. இன்று தேநீர்சிஸ் நிறுவனத்தால் நீக்கப்பட்ட பலரும் இரு வகையில் விழுகின்றனர் ஒருவர் 'Trainee' மற்றொருவர் 'Associate Consultant'.

ப்ராஜெக்ட் கிடைப்பதற்காக மாதங்களாக காத்திருப்பவர்கள் நிறுவனத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். பொதுவாக சிலர் ஏமாற்றும் எண்ணத்துடன் கிடைக்கின்ற ப்ராஜெக்ட்களுக்கு நொட்டை கூறி வேலை செய்யாமல் சம்பளம் வாங்கப் பார்ப்பதுண்டு. வேறு சிலர் நிறைய முயற்சிகள் எடுத்தும் ப்ராஜெக்ட் ஏதும் இல்லாத காரணத்தால் காத்திருப்பதும் உண்டு; இந்த இரண்டு பிரிவுகளில் உள்ளவரையும் கரிசனம் பார்க்காது நிறுவனம் வேலையைவிட்டு நீக்கியுள்ளது.

அடுத்ததாக consultant-களுக்கு வருவோம். யார் இவர்கள்? அடிப்படையாக ஒரே நிறுவனத்தில் பல ஆண்டுகள் வேலை பார்த்தவர்களால்தான் இந்த பதவியை எட்ட முடியும். இன்று நிறுவனம் இந்த மனிதர்கள் பலரை எப்படி தகுதியற்றவர் எனக்கூறி நீக்கியுள்ளது? இவர்கள் உண்மையிலே தகுதியற்றவர்கள் என்றால் எதற்காக இத்தனை ஆண்டுகள் இவர்களை நிறுவனத்தில் வைத்திருக்க வேண்டும் என்று யோசித்துப் பார்க்க வேண்டும்.

Associate Consultant பதவியில் இருப்பவர்கள் மாதத்திற்கு குறைந்தது ஐம்பதாயிரத்திலிருந்து ஒரு லட்சம் வரை சம்பாதிக்கின்றனர். இவர்களை வேலையிலிருந்து நீக்கிவிட்டு இவர்கள் இடத்தில் வேறொரு ஆளை புகுத்தி விட்டால் அவர்களுக்கு இருபதிலிருந்து, முப்பதாயிரம் வரை சம்பளம் கொடுத்தால் போதும். அதுவும் புதிதாக இணைந்துள்ளவர்களைப் பயன்படுத்தினால் இருபதாயிரம் கொடுத்தால் போதுமானது. இதுதான் ஐ.டி. நிறுவனங்களின் காஸ்ட் கட்டிங் (Cost Cutting) முறை.

'ஷாக்' விளைவுகள்

நண்பன் கூறுகையில், இப்போதெல்லாம் என் டீம் லீட் தினமும் வந்தவுடன் மெயில் எதாவது வந்ததா என்று கேட்கிறார். எல்லோர் மீதும் அவருக்கு நம்பிக்கை போய் விட்டது. வெளிநாட்டிலும் இதுதான் நடக்கிறது. இங்கே டிஸ்மிஸல் லெட்டரை கொடுத்து ஒரு மாத ஊதியம் கொடுத்து ஒரே நாளில் கிளம்பச் சொல்கிறார்கள், வெளிநாட்டில் ஒரு மாத கெடுவாம்.

அங்க ஃபாரின்ல இருப்பவர் தினமும் போன் பண்ணி ஏதாவது சொன்னாங்களா? என்று தான் முதலில் கேட்கிறார். பக்கத்து டீம்'ல காத்தால வந்தவர் சாப்பிட போய் இருக்காரு. வந்தவருக்கு ஹெச்.ஆர்.கிட்டேந்து ஒரு மெயில் 'உங்கள வேலையை விட்டு தூக்கறோம்ன்னு' அப்படியே ஷாக்காகி உட்கார்ந்தவர் சாயங்காலம் வீட்டுக்கு கிளம்பிட்டார்.

அநியாயம் பண்றாங்க இங்க நிறைய பேர் ஹவுசிங் லோன், அது இதுன்னு இறக்கி விட்டுறுக்காங்க. பேமிலி மேன் - எங்கள வேலையை விட்டு தூக்கிட்டா நாங்க குடும்பத்த எப்படி காப்பாற்றுவதுன்னு ஒவ்வொரு நாளும் கவலைபடறாங்க. இந்த இடம் இப்போ வேலைப் பார்க்குற இடம் மாதிரியே இல்லை. நாளைக்கு இவங்களோட ஹெல்ப் இல்லாம நாங்கல்லாம் எப்படி வேலைப் பார்க்க முடியும்?

எத்தனையோ வருடம் தேநீர்சிஸ் நிறுவனம் ஸ்டாக் மார்க்கெட்டில் பெரிய பெரிய லாபங்களை ஈட்டிருக்கு. அப்பலாம் அதுக்கு காரணமா இருந்த ஊழியர்களுக்கெல்லாம் ஊதியத்தை ஏற்றியா கொடுத்திருக்கு? நிறுவனத்திற்காக உழைத்தவர்களை Poor Performers என்று பொய்யாக பட்டம் கட்டி வேலையை விட்டு அனுப்புவது அநீதியானது.

தன்னுடன் இருப்பவர்கள் எக்கேடு கெட்டாலும் கெடட்டும், தன் வேலை போகாமல் இருந்தால் சரி என்ற நோக்கத்துடன் பிற ஊழியர்கள் இன்னும் சுயநலமாக அமைதிகாப்பது தான் வேடிக்கையாக இருக்கிறது.

வளைந்து கொடுத்து வளைந்து கொடுத்தே பழகிய முதுகெலும்புகள் இன்று ரப்பர் துண்டாக மாறி வருகின்றன. முதலாளித்துவத்தின் உச்சபட்ச பசிக்கு இன்று உணவுகள் கூடிக் கொண்டே போகின்றன. தீராப் பசிக்கு உணவாக - என்றுதான் உறைக்குமோ?

கார்ப்பரேட் சோசியல் ரெஸ்பான்சிபிலிட்டி என்று, சமூக சேவைக்கு லட்சக் கணக்கில் பணம் ஒதுக்குகிறார்கள். உங்களிடம் வேலை பார்ப்பவனும் சமுதாயத்தில் ஓர் அங்கம் தானே? அவனுடைய நல்வாழ்வுக்கு யார் சார் ரெஸ்பான்சிபிள்?

ஹரி, தொடர்புக்கு nanaprabhu5591@gmail.com

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%90%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE/article6741885.ece

Saturday, December 13, 2014

இந்துக்களுக்கு எதிரான இந்துத்துவா,செவுட்டில் பொளேர்

மதவெறியைத் தூண்டி ஓட்டுப் பொறுக்கியும், அதற்காக மூன்றாம் தர ரவுடிகளாகவும் செயல்பட்டு வந்த பாஜகவின் உயர்மட்டத் தலைவர்களில் பலர், ஆட்சிக்கு வந்தவுடனே பக்குவப்பட்ட மனிதர்கள் போன்று வேஷம் கட்டத் துவங்கி விட்டதை கவனித்தீர்களா?

பாஜகவின் இரண்டாம் நிலையில் உள்ள தலைவர்களோ, தாங்கள் நினைத்ததை எல்லாம் அறிக்கையாக விடும் உரிமை பெற்று விட்டார்கள்; அல்லது திட்டமிட்டபடி உயர்மட்டத் தலைவர்கள் சொல்ல வேண்டியதை இவர்கள் வெளிப்படுத்துகிறார்கள். ஓட்டுப் போட்டவர்கள் ஆவேசம் அடைந்தால் "அவரது சொந்தக் கருத்து" என்ற escape strategy வேறு.

பெரும்பான்மை ஓட்டுக்களின் - நேரடியாகச் சொல்ல வேண்டுமெனில் அப்பாவி இந்துக்களின் ஆதரவை உருவாக்குவதே, பாஜகவின் கடந்த கால மற்றும் நிகழ்கால அணுகுமுறை. இந்த தந்திரம் மூலமாகவே ஆட்சியைப் பிடித்தும் இருக்கிறது பாஜக.

    இந்துக்களுக்கு எதிரான இந்துத்துவாவின் வர்ணாசிரமக் கொள்கையை நடைமுறைக்கு கொண்டு வர இரவு பகலாக முனைகிறது பாஜக என்கிற உண்மை இந்திய மக்களிடையே உரத்துச் சொல்லப்பட வேண்டும்.

இதே அடிப்படையில்தான் பாஜக, கடந்த பல்லாண்டுகளாக இந்த நாட்டில் செயல்பட்டு வந்தது. தற்போது ஆட்சிக்கு வந்த பின் அதே திட்டத்தையும், வழிமுறையையும் புதிய திட்டத்தின்படி செயல்படுத்த ஆரம்பித்து உள்ளது.

‎நல்லாட்சி‬ புரிந்தால் எல்லாரும் மீண்டும் ஒரு முறை பாஜகவை ஆட்சிக் கட்டிலில் ஏற்றுவார்கள். மக்களுக்கும் நலன் விளையும். ஆனால் ஆறு மாத ஆட்சியைக் கண்ட இந்தியர்களின் பார்வையில், ஆள்வோர் நல்லவராய் மாறி விட்டது போல் தெரியவில்லை.

பெரும்பான்மையாக இருப்பதாலேயே "இந்து மதத்தின் நன்மைக்காக போராடும் சேவகர்" என்ற போலி வேஷம் தரித்து தன்னை காட்டிக் கொள்ளவே பாஜக விரும்புகிறது. இதனை எதிர்க்கும் இந்தியர் எவராக இருப்பினும் அவரை அந்நியப்படுத்தி, அப்பாவி இந்து ஓட்டுக்களைத் தொடர்ந்து அபகரிக்கும் அணுகுமுறையை பாஜக தொடரவே விரும்புகிறது.

சரி, பொய் வாக்குறுதிகள் கொடுத்து ஆட்சியில் அமர்ந்தாகி விட்டது.  சொல்லியபடி இந்து மதத்தின் நன்மைக்காகவும் சரி, இந்திய நாட்டின் வளர்ச்சிக்காகவும் சரி எதையும் செய்ய முயலவில்லை. இந்துக்களுக்கு எதிரான இந்துத்துவாவின் வர்ணாசிரமக் கொள்கையை நடைமுறைக்கு கொண்டு வர இரவு பகலாக முனைகிறது பாஜக என்கிற உண்மை இந்திய மக்களிடையே உரத்துச் சொல்லப்பட வேண்டும்.

இந்த உண்மையை உணராதவரை அப்பாவி இந்துக்கள், பசுத்தோல் போர்த்தி இருக்கிற ஹிந்துத்துவ விஷ ஜந்துக்களையும் பசுவாகவே எண்ண ஆரம்பிப்பார்கள்.

இந்த அணுகுமுறையின் முதல் கட்டத்தில் (Phase-1) எதிர்ப்பாளர்களை ஒடுக்குவது, தன்னுடைய ஆதரவாளர்களாய் ஓட்டு வங்கி இந்துக்களை உருவாக்குவது போன்றவற்றை பாஜக உருவாக்கும்.

இரண்டாம் கட்டத்தில் (Phase-2) தன் சுயரூபத்தை - தற்போதைய இந்து மத நம்பிக்கையாளர்களுக்கே எதிராகவே அது வெளிப்படுத்த ஆரம்பிக்கும். இந்து சகோதரர்களுக்குப் புரியும் படியாக சொல்ல வேண்டுமெனில் phase-2 கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்ற ரீதியில் தான் இருக்கும்.

எனவே, தாமதமின்றி இந்த எதார்த்த உண்மையை அனைவரும் உணரும் வண்ணம், சமூக ஆர்வலர்கள் தங்கள் சொல், செயல், ஆற்றலை ஆக்கப்பூர்வமாக வெளிப்படுத்த வேண்டும்.

மதவெறிச் செயல்களை மேம்போக்காகக் கண்டு உணர்ச்சி வசப்பட்டு, ஆத்திரப்பட்டு, சூழ்ச்சிக்கு பலியாகி வெறும் எதிர்ப்பை மாத்திரமே போகிற போக்கில் கொட்டிச் செல்வோமெனில், அது எந்த மாற்றத்தை பாஜக எதிர்பார்த்து காய் நகர்த்துகிறதோ, அதை நோக்கி தேசத்தை இட்டுச் சென்று விடும் ஆபத்தான சூழலை உண்டாக்கும்.

உதாரணத்திற்கு, கட்டாய மதமாற்றம் என்ற பெயரில் ஆக்ராவில் 200 முஸ்லிம்களை இந்துக்களாக மாற்றி விட்டதாக விட்ட அறிக்கை, மறுநாளே புஸ்வாணமாகி ஊர் சிரித்தது. பணத்தையும் பயத்தையும் காட்டி இவர்கள் செய்த செயல், அரசு தரப்பின் அதிகாரப்பூர்வமான "மத மாற்றத் தடைச்சட்டம்" கொண்டு வருவதற்கான டிராமா என்பதை அறியாதவர் இப்போது எவருமிலர். சோழியன் குடுமி சும்மா ஆடாது என்ற முதுமொழிக்கேற்ப, பாஜக தலைவர்களின் வன்முறையும், வெறிச்செயல்களுக்கும் பின்னணிகள் காய் நகர்த்தல்கள் உண்டு என்பதை அறிந்து கொள்வோம்.

ஆகவே இந்தியாவை நேசிக்கும் அனைவரும், ஆளும் பாஜக அரசின் போக்கு குறித்த உங்கள் கருத்துக்களை விவேகமாக - அறிவுப்பூர்வமாக - பக்குவமாக, ஆக்கப்பூர்வமாக, தீர்க்கமாக வெளிப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்!

அதை விடுத்து, வெறுமனே உணர்ச்சிவசமும், ஆத்திரமும் பட்டால் மோசமே விளையும்!


- அப்பாஸ் அல் ஆஸாதி M.C.A.,M.Sc.,

http://www.satyamargam.com/articles/readers-page/2479-hindutva-is-against-hindus.html

Sunday, November 16, 2014

அமெரிக்காவை கண்டுபிடித்தது முஸ்லிம்களே-பரபரப்பு செய்தி

அமெரிக்காவை கொலம்பஸ் கண்டுபிடித்ததாக வரலாறு தெரிவிக்கின்றன. ஆனால் அமெரிக்காவை கண்டுபிடித்தது அவர் அல்ல. அவருக்கு முன்னதாக முஸ்லிம்கள்தான் கண்டுபிடித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தகவலை துருக்கி அதிபர் ரீசெப் தயிப் எர்டோகன் தெரிவித்துள்ளார். துருக்கியின் இஸ்தான்புல் நகரில் லத்தீன் அமெரிக்கா நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் தலைவர்கள் மாநாடு நடந்தது.

அதில் துருக்கி அதிபர் எர்டோகன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

அமெரிக்காவை கண்டுபிடித்தது கிறிஸ்டோபர் கொலம்பஸ் என்று கூறுகின்றனர். உண்மை அதுவல்ல. அமெரிக்காவை 1178–ம் ஆண்டில் முஸ்லிம்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அதாவது கொலம்பஸ் அமெரிக்காவில் காலடி பதிக்கும் முன்பே அந்நாட்டை முஸ்லிம்கள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது கொலம்பஸ் அங்கு செல்வதற்கு 300 ஆண்டுகளுக்கு முன்னதாக 12–ம் நூற்றாண்டிலேயே கண்டுபிடித்துஇருக்கின்றனர்.

அமெரிக்கா குறித்து கொலம்பஸ் வெளியிட்டுள்ள செய்தியில், கியூபன் கடற்கரையில் உள்ள மலையில் ஒரு மசூதி இருந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் 12–ம் நூற்றாண்டிலேயே லத்தீன் அமெரிக்காவுக்கும், இஸ்லாமுக்கும் இடையே தொடர்பு இருந்துள்ளது என்றார்.

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!