Saturday, July 7, 2012

ராம கோபாலய்யர் எங்கே???


சமீபத்தில் இந்துமுன்னணி தலைவர் ராமகோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கிராமங்களிலோ, நகரங்களிலோ எருமை மாடுகளை பார்ப்பது அரிதாகி வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் தமிழகத்தில் உள்ள பசுக்களும், காளைகளும், எருமைகளும் கொல்லப்பட்டு மாமிசமாகவும் , தோலாகவும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிவிடும். இதன் ஆபத்தை உணர்ந்த கர்நாடக அரசு மாடுகளைக் கொல்வதை தடை செய்ததுடன் லாரிகளில் மாடுகளை ஏற்றிச் செல்லவும் தடை விதித்துள்ளது.
ஆந்திராவில் விவசாயிகளின் பரிதாப நிலையால் மாடுகளை அடிமாட்டு விலைக்கு விற்கும் பாவத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதே நிலை தமிழகத்துக்கு வரும் முன் தடுக்க முதல்வர் மாடுகளைக் கொல்வதை தடைசெய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். வெளி மாநிலங்களுக்கு தமிழகத்திலிருந்தோ , தமிழகம் வழியாகவோ மாடுகள் கொண்டு செல்வதையும் தடை செய்ய வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்வதாக ராமகோபாலன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த படத்தைப் பாருங்க; எருமையை வெட்டுறது முஸ்லிம் இல்லங்க. சாட்சாத் ராமகோபாலனின் பூணூல் வகையறாக்கள் தான். இதற்கு பெயர் எருமை வதை இல்லை என்று சொல்லப் போகிறாரா ராமகோபால அய்யர்..?


No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!