Tuesday, May 27, 2014

இந்தக் கொடுமைகளுக்கு யார் முற்றுப் புள்ளி வைப்பது?

2003ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி மாலை மணி 4:30.
முஃப்தி அப்துல் கையூமின் வீட்டுக் கதவு தட்டப்படுகிறது. திறந்தார். வந்தவர்கள் புலனாய்வுத் துறையிலிருந்து வந்திருப்பதாகக் கூறினர். "என்ன விஷயம்?" என்று முஃப்தி கேட்க, "ஸஹாப் உன்னைப் பார்க்க விரும்புகிறார்" என்றனர். குஜராத்தில் 'ஸஹாப்' என்றால் யாரைக் குறிக்கும் என்று அங்கு எல்லாருக்கும் தெரியும்.
"நான் போயிருக்கக் கூடாதுதான். ஆனால் வேறு வழியில்லை" என்று பதினொரு ஆண்டுகளைச் சிறைச்சாலையில் கழித்து, நிரபராதி என்று விடுதலை செய்யப்பட்ட பின்னர் 'தி ஸிட்டிஸன்' இணைய இதழுக்குப் பேட்டியளித்த முஃப்தி கூறுகிறார்.
வாகனத்தில் ஏறி உட்கார்ந்ததும் கண்கள் கட்டப்படுகின்றன. வாகனம் அஹ்மதாபாத்திலுள்ள புலனாய்வுத் துறையின் தலைமையகத்தில் போய் நிற்கிறது. விசாரணை அறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட முஃப்திக்கு உடனேயே சித்திரவதை தொடங்குகிறது. "எவ்வளவு கொடூரமான, எத்தனை வகையான சித்திரவதைகளை வேண்டுமானாலும் நீங்கள் கற்பனை செய்துகொள்ளுங்கள். அவையெல்லாம் நான் அனுபவித்தவற்றுக்கு ஈடாகாது" என்கிறார் முஃப்தி.
"நினைவு தடுமாறி மயங்கி விழும்வரை அடித்தார்கள்; மின்சார அதிர்வுகளை உடலில் பாய்ச்சினார்கள். நினைவு திரும்பியதும் 'அக்'ஷர்தம் கலாச்சார மண்டபத்தில் நடந்த தாக்குதலில் உன்னுடைய பங்கு என்ன?' எனக் கேட்டனர். அதுவரை எதற்காக நான் இங்கு அழைத்து வரப்பட்டேன்; சித்திரவதை செய்யப்படுகின்றேன் என்றே எனக்குத் தெரியாது. நான் அலறினேன். 'எனக்கு வன்முறையிலெல்லாம் நம்பிக்கை கிடையாது. என்னுடைய மார்க்கம் வன்முறையைப் போதிப்பதல்ல. வன்முறைக்கு நான் எதிரானவன். நீங்கள் சொல்லுவதில் நான் ஈடுபடவில்லை' என்று வேண்டிய மட்டும் கதறினேன். கேட்கத்தான் ஆளில்லை. ஒருநாள் இரண்டுநாள் இல்லை. பதினொரு நாட்கள் (ஆகஸ்ட் 28 வரை) நான் தாங்கவியலாத சித்திரவதைக்கு ஆளானேன். அதுவரைக்கும் நான் சட்டத்துக்குப் புறம்பாகக் கைது செய்யப்பட்ட விஷயமே வெளி உலகுக்குத் தெரியாது"
"என்னுடைய மஹல்லாவைச் சேர்ந்த பெண்கள், எனக்காகவும் என்னைப் போலவே 'காணாமல் போன' மற்றவர்களுக்காகவும் ஒரு போராட்டத்தைத் தொடங்கியிருந்தனர். 2003செப்டம்பர் 23ஆம் தேதி என்னிடமும் மற்ற ஐவரிடமும் 'ஒப்புதல் வாக்குமூலம்' என்பதாக வெற்றுத் தாளில் அதிகாரிகள் கையெழுத்து வாங்கிக் கொண்டனர். கூடுதலாக, முர்த்தஸா என்பவருக்கும் அஷ்ரஃப் அலீ என்பவருக்கும் நான் எழுதுவதாகத் தனித் தனியாக இரண்டு கடிதங்களை அதிகாரிகள் சொல்லச் சொல்ல நான் எழுத, அக்கடிதங்களைப் பெற்றுக் கொண்டு, அந்த நரகத்திலிருந்து எங்களைச்  சிறைச்சாலைக்கு அனுப்பினர். 
சிறைச்சாலை அதிகாரிகளும் மனிதர்கள்தாமே! எங்களைப்போல் எத்தனையோ பேரைப் பார்த்தவர்கள். நாங்கள் குற்றம் செய்யாத அப்பாவிகள் என்பது அவர்களுக்குத் தெளிவாகத் தெரிந்தது. சிறை அதிகாரிகள் எங்களை நல்ல முறையில் நடத்தினர்"
முஃப்தி அப்துல் கையூம், விசாரணை என்ற பெயரில் சட்ட விரோதமாக அழைத்துச் செல்லப்பட்டபோது அவருக்கு வயது 31. அவருடைய ஐந்து வயது மற்றும் எட்டுமாதக் கைக்குழந்தை இருவரும் இப்போது பதின்ம வயதை அடைந்திருக்கின்றர். 'பயங்கரவாதி'யின் மனைவி எத்தனையோ துன்பங்களையும் அவப் பெயரையும் சுமந்துகொண்டு இரு பிள்ளைகளையும் வளர்த்தெடுத்தார்.
முஃப்தி சிறையிலிருந்த காலத்தில் அவருடைய தந்தை இறந்து போனார். முதிய தாய் விதவையானார். தந்தையின் ஜனாஸாத் தொழுகையில் கலந்துகொள்ளக்கூட முஃப்திக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
2002 செப்டம்பர் 24, மாலை மணி 4.45.
குஜராத் மாநிலம் காந்தி நகரில் 23 ஏக்கர் பரப்பளவில் எழுப்பப்பட்டுள்ள சுற்றுலா கேந்திரமான அக்'ஷர்தம் கலாச்சார ஆலயத்தின் புறவாசல் எண் மூன்றின் அருகில் ஒரு வெள்ளை நிற அம்பாஸ்டர் கார் வந்து நின்றது.
அதிலிருந்து இறங்கிய இருவர், தம் பொதிகளைச் சுமந்தவர்களாக உள்ளே நுழைய முயன்றனர். காவலாளி தடுக்கவே, புறவாசல் கதவின் மீதேறி உள்ளே சென்றனர்.
பின்னர் தம் பொதிகளிலிருந்து துப்பாக்கிகளை எடுத்து, இலக்கில்லாமல் சுட்டனர்; கையெறி குண்டுகளையும் வீசினர். (2008இல் மும்பையில் மாவீரர் கார்கரே கொல்லப்பட்டபோது நடந்த தாக்குதல் போலவே இதுவும் இலக்கற்றதாக இருந்தது. இதிலும் சுரேஷ் எனும் முக்கியமான ஒரு கமாண்டோ கொல்லப்பட்டார்).
கலாச்சார மையத்தின் உள்ளேயிருந்த காவலர்களுக்கு வயர்லெஸ் மூலமாகத் தாக்குதல் செய்தி அனுப்பப்பட்டது. உள் கதவுகள் மூடப்பட்டன. உள்ளூர் காவல்துறையினரும் தேசிய பாதுகாப்புப் படையினரும் 15 நிமிடங்களுக்குள் வந்து சேர்ந்தனர். அப்போதைய துணைப் பிரதமர் எல்.கே. அத்வானியின் உத்தரவின் பேரில் கருப்புப் பூனை கமாண்டோக்களும் பறந்து வந்தனர். அந்த நேர இடைவெளியைப் பயன்படுத்திக்கொண்ட பயங்கரவாதிகள் பொருட்காட்சியகத்தின் முதலாவது மண்டபத்துக்குள் நுழைந்து மறைந்து கொண்டனர்.
கமாண்டோக்கள் கலாச்சார மையத்தைச் சுற்றி வளைத்துக் கட்டுப்பாட்டுக்குள் எடுத்தபோது 32 அப்பாவிகள் உயிரிழந்திருந்தனர்; 80 பேர் படுகாயம் அடைந்திருந்தனர்.
பயங்கரவாதிகள் தம் பதுங்குமிடங்களை அடிக்கடி மாற்றிக் கொண்டனர். கமாண்டோக்கள் தொடர்ந்து போராடி மறுநாள் 24 செப்டம்பர் 2002 காலை 6.15 மணியளவில் இரு பயங்கரவாதிகளையும் சுட்டு வீழ்த்தினர்.
இவை அத்தனையும் குஜராத்தின் முதல்வராகவும் உள்துறை அமைச்சராகவும் மோடி பதவியேற்ற அடுத்த ஆண்டு நடைபெற்ற தாக்குதல் பற்றிய சுருக்கக் குறிப்புகளாகும்.
அக்'ஷர்தம் கலாச்சார மையத் தாக்குதல் தொடர்பான விசாரணை, குஜராத்தின் முன்னாள் காவல்துறை துணை இயக்குநரும் சொஹ்ராபுத்தீன் குழுவினர் உட்படப் பலரைப் போலி என்கவுண்டரில் கொலை செய்து தற்போது சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருப்பவருமானவன்சாராவிடம் ஒப்படைக்கப்பட்டது.
கலாச்சார மையத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளாக முர்தஸா ஹாஃபிஸ் யாசீன் மற்றும் அஷ்ரஃப் அலீ முஹம்மது ஃபாரூக் ஆகிய இருவரும் பாகிஸ்தானைச் சேர்ந்த லக்'ஷரே தொய்பா அமைப்பினர் என்றும் குஜராத் முதல்வர் மோடியைக் கொல்ல வந்தவர்கள் என்றும் பின்னர் இலக்கை மாற்றிக் கொண்டார்கள் என்றும் காவல்துறையினரால் கூறப்பட்டனர்.
பாகிஸ்தானிலிருந்து வந்த இரு பயங்கரவாதிகளுக்கும் உடந்தையாக உள்ளூர் ஆட்கள் வேண்டுமே! அதற்கு என்ன செய்வது?
முஸ்லிம்களின் பொருளாதார உதவியுடன் தொடக்கக் கல்வியிலிருந்து ஐப்பீஎஸ் வரை படித்த வன்சாரா, அப்பாவி முஸ்லிம்களை அள்ள ஆரம்பித்தார்.
(1) ஆதம் சுலைமான் அஜ்மீரி, (2) ஷான் மியான் (எ) ச்சாந்த் கான் (உ.பி), (3) முஃப்தி அப்துல் கையூம் மன்சூரி, (4) முஹம்மது சலீம் ஷேக், (5) மவ்லவீ அப்துல்லாஹ் மியான் காதிரி, (6)அல்த்தாஃப் ஹுஸைன் மாலிக்.
ஆகிய அறுவரைக் கைது செய்து ஒவ்வொருவருக்கும் தனித்தனி கதை வசனம் எழுதியது குஜராத் காவல் துறை. ஆதம் சுலைமான் அஜ்மீரி, பயங்கரவாதிகள் தங்குவதற்குத் தம் சகோதரரின் வீட்டைக் காலி செய்து கொடுத்தாராம். அல்த்தாஃப் ஹுஸைன் மாலிக், ஆயுதங்கள் வெடி மருந்துகள் சப்ளை செய்தாராம். எந்த இடத்தைத் தாக்குவது என்பதை இலக்கு நிர்ணயித்து வாகன வசதி செய்து கொடுத்தவர்கள் முஃப்தி அப்துல் கையூம் மன்சூரியும் மவ்லவீ அப்துல்லாஹ் மியான் காதிரியுமாம். இதில் முஃப்தி அப்துல் கையூம் மன்சூரி இரு கடிதங்களை உருது மொழியில் எழுதி பயங்கரவாதிகளின் பாக்கெட்டுகளில் ஆளுக்கு ஒன்று வைத்து அனுப்பினாராம். மேற்காணும் அறுவரைத் தவிர மேற்கொண்டு 28 பேரை காவல்துறை இதுவரை தேடி வருகிறதாம்.
மேற்காணும் கதை வசனம் குஜராத்தின் POTA சிறப்பு நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டு, கடந்த ஜூலை 1, 2006இல் (1) ஆதம் சுலைமான் அஜ்மீரி, (2) ஷான் மியான் (எ) ச்சாந்த் கான் (உ.பி), (3) முஃப்தி அப்துல் கையூம் மன்சூரி ஆகிய மூவருக்கு மரண தண்டனையும் முஹம்மது சலீம் ஷேக்குக்கு ஆயுள் தண்டனையும் மவ்லவீ அப்துல்லாஹ் மியான் காதிரிக்குப் பத்தாண்டு சிறையும் அல்த்தாஃப் ஹுஸைன் மாலிக்குக்கு ஐந்தாண்டு சிறை தண்டனையும் விதித்து POTAசிறப்பு நீதிமன்றம் தீர்ப்புக் கூறியது. குற்றத்துக்கான சான்றுகளாக, குற்றம் சுமத்தப்பட்டவர்கள் 'எழுதிக் கொடுத்த' ஒப்புதல் வாக்குமூலங்களும் பயங்கரவாதிகளின் பாக்கெட்டுகளில் 'கண்டெடுக்கப்பட்ட' முஃப்தி எழுதியதாகக் காவல்துறை கூறிய இரு கடிதங்களும். 
குற்றம் சாட்டப்பட்ட அறுவரும் தாங்கள் அனைவரும் நிரபராதிகள் என்பதாகக் குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.
"மூன்றும் மூன்றும் ஆறு; கணக்கு சரியாத்தானே வருது" என்பதாக மூவருக்குத் தூக்கையும் மூவருக்குச் சிறையையும் குஜராத் உயர் நீதிமன்றம் கடந்த 30.5.2010 அன்று உறுதி செய்தது.
குற்றம் சாட்டப்பட்ட அறுவருக்காகத் தொடர் போராட்டம் நடத்திய ஜமாஅத்துல் உலமா ஹிந்தின் சட்டத்துறையில் பொறுப்பு வகிக்கும் மவ்லவீ அஷ்ரஃப் மதனீ, உச்ச நீதிமன்றத்திற்கு வழக்கை நகர்த்தினார்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.கே. பட்நாயக், நீதிபதி வி. கோபால கவ்டா ஆகிய இருவர் அடங்கிய பெஞ்ச், கடந்த 16.5.2014 வெள்ளிக்கிழமை, "குற்றம் சாட்டப்பட்ட அறுவரும் நிரபராதிகள்" எனத் தீர்ப்பு வழங்கியது. அத்துடன் நில்லாமல், "நாட்டின் இறையாண்மைக்கும் பாதுகாப்புக்கும் சவாலான இந்த வழக்கில் புலன் விசாரணை அமைப்புகளின் கையாலாகாத் தனத்தை எண்ணி வேதனைப் படுகிறோம்" என்று நீதிபதிகள் இருவரும் குறிப்பிட்டுள்ளனர்.
கமாண்டோக்களின் துப்பாக்கிக் குண்டுகளினால் துளைக்கப்பட்ட பயங்கரவாதிகளின் குருதியில் குளித்த ப்பேண்ட் பாக்கெட்டுகளிலிருந்து 'எடுக்கப்பட்ட' முஃப்தி அப்துல் கையூம் மன்சூரியின் கடிதங்கள் மட்டும் இரத்தக் கறை இல்லாமல், தூசி படியாமல், மடிப்புக் கலையாமல் இருந்ததை உச்சநீதிமன்ற நீதிபதிகள் கவனித்துவிட்டனர். பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டது 25 செப்டம்பர் 2002; அவர்களின் ப்பேண்ட் பாக்கெட்டுகளில் இருந்து 'எடுக்கப்பட்ட' கடிதம் எழுதப்பட்டதோ 23 செப்டம்பர் 2003இல்.
மேலும், "விலை மதிப்பற்ற பல உயிர்களை பலி கொண்ட பயங்கரவாதத் தாக்குதலில், உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்த வேண்டிய காவல்துறை, அப்பாவிகளைக் கைது செய்ததோடு அவர்களுக்குக் கடுமையான தண்டனை வாங்கிக் கொடுப்பதில் முனைப்புக் காட்டியது. குற்றம் சுமத்தப் பட்டவர்களிடமிருந்து 'பெறப்படும்' ஒப்புதல் வாக்குமூலங்கள் செல்லாது எனும் அடிப்படையான சட்டக் கோட்பாட்டைக் கீழ்க் கோர்ட்டுகள் கவனத்தில் கொள்ளவில்லை" என்று நீதிபதி கோபால கவ்டா குஜராத் காவல்துறையையும் கீழ்க் கோர்ட்டுகளையும் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
POTA சட்டம் கடந்த 30.8.2003 காலாவதியானது. அதற்குள் கைது செய்யப்பட்ட அப்பாவி முஸ்லிம்களை POTA வழக்குக்குள் கொண்டுவந்து, அவர்களைத் தூக்கில் போட்டுவிடவேண்டும் என்பதே காவல்துறையின் கனவாக இருந்தது என்பதை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சான்றுகளின் மூலம் உறுதி செய்தனர்.
“எனவே, ஜுலை 1, 2006இல் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் ஆணையையும் புறந்தள்ளியும் ஜுன் 1, 2010இல் குஜராத் உயர்நீதி மன்றம் வழங்கிய பொதுத் தீர்ப்பை மறுத்துரைத்தும் அனைத்துக் குற்றவாளிகளையும் குற்றமற்றவர்கள் என விடுவிக்கிறோம்” என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
"கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் வலப்புற ப்பேண்ட் பாக்கெட்களிலிருந்து உருது மொழியில் எழுதப்பட்ட கடிதங்களை 'எடுத்ததாக'க் கூறிய பிரிகேடியர் சீத்தாபதியை POTA சிறப்பு நீதிமன்றம் விசாரிக்கவேயில்லை. மேலும் 46-60 தோட்டாக்களால் துளைக்கப்பட்ட பயங்கரவாதிகளின் உடைகள் 12 ஆண்டுகளுக்குப் பிறகு எங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன. அவை புழுதியும் உறைந்துபோன இரத்தமும் படிந்தவையாயிருந்தன.
பயங்கரவாதிகளின் ப்பேண்ட் பாக்கெட்டுகளைத் துளைத்த தோட்டா, அவற்றிலிருந்து எடுக்கப்பட்ட உருதுக் கடிதங்களைத் துளையிடவில்லை என்பது நம்பும்படியாக இல்லை" என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தம் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அப்பாவிகளைக் குற்றவாளிகளாகக் காட்டுவதற்கு நாடகமாடிய குஜராத் காவல்துறையினரை யார் தண்டிப்பது?
காவல்துறையின் செல்லாத ஆவணங்களை ஏற்றுக்கொண்டு, அப்பாவிகளுக்குத் தூக்குத் தண்டனை வழங்கிய சிறப்பு நீதிமன்ற நீதிபதிகளையும் வழக்கு என்னவென்றே படித்துப் பார்க்காததோடு, அப்பாவிகளைக் கைது செய்த குஜராத் காவல்துறை துணை இயக்குநர் வன்சாராவை விசாரிக்காமலேயே தீர்ப்பெழுதிய குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதிகளை யார் தண்டிப்பது?
விசாரணை என்ற பெயரில் சட்ட விரோதமாக அடைத்து வைத்துச் சித்திரவதை செய்த புலனாய்வு அதிகாரிகளை யார் தண்டிப்பது?
எல்லாவற்றுக்கும் மேலாக, ஆறு நிரபராதிகள் இழந்த இளமைக் காலப் பதினொரு ஆண்டுகளை யாரால் திருப்பித் தர முடியும்?
அவர்தம் குடும்பங்கள் அடைந்த சொல்லொணாத் துயரங்களையும் துன்பங்களையும் அவப் பெயர்களையும் பொருளாதார இழப்புகளையும் எதைக் கொண்டு ஈடு செய்வது?
இந்தக் கொடுமைகளுக்கு யார் முற்றுப் புள்ளி வைப்பது?
இது போன்ற கொடுமைகள் இனி இந்தியாவில் தொடர்ந்து அல்லாஹ் நாடினால் நடைபெறலாம், இன்றைய கால சூழலில் இவைகளை எதிர்க்கொள்ள சமுதாய இயக்கங்கள் தயாராக வேண்டும். தங்களின் ஈகோக்களை நிரந்தரமாக தூக்கி எறியும் தருணம் இப்போதுதான் என்பதை ஒட்டுமொத்த முஸ்லீம் இயக்கங்கள் உணர்ந்தால் சரி. உணர்வார்களா?
நன்றி: சத்தியமார்க்கம் இணையதளம்

தொடர்புடைய சுட்டிகள்:-
 
 
 
 http://adirainirubar.blogspot.com/2014/05/blog-post_7519.html#comment-form
 

Monday, May 26, 2014

மக்காவை பார்த்து அதிர்ச்சி

ஷ்யாவின் விண்வெளி வீரர்கள் ‘இளவரசர் சல்மான் அறிவியல் ஆய்வகத்துக்கு’ வருகை புரிந்திருந்தனர். விண்வெளி வீரர்களுக்கான அமைப்பாக செயல்படும் (ASE) என்ற அமைப்பின் 25 ஆவது அமர்வுக்கு இந்த விண்வெளி வீரர்கள் விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர். 

அனடோலி இவானிஷின்(Anatoly Ivanishin) என்ற ரஷ்ய விண்வெளி வீரர் அங்குள்ள மாணவர்களோடு பேசும் போது ‘நாங்கள் விண்வெளியில் பயணிக்கும் போது கால நிலை சிறப்பாக இருக்கும் நேரங்களில் பூமியை படம் பிடிப்பது உண்டு. அவ்வாறு நாங்கள் படம் பிடிக்கும் அமெரிக்கா, பிரான்ஸ், ஐரோப்பாவின் சில இடங்களையும் படம் பிடிக்க முயற்ச்சித்தோம். லென்ஸ் அந்த அளவு பவர் இல்லாததால் எங்களால் துல்லியமாக எடுக்க முடியவில்லை.


சில மணிகளுக்கு பிறகு வளைகுடாவின் பக்கம் எங்கள் பார்வையை செலுத்தினோம். ஆச்சரியமாக அப்போது இரண்டு இடங்கள் மட்டும் மிகவும் பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருந்தது. இது எனக்கு அதிசயமாகவும் தெரிந்தது. அந்த இரண்டு இடங்களையும் வைத்து மேலும் பல புகைப்படங்களையும் எடுத்தோம். அதன் பிறகு பல ஆய்வுகளுக்கு பிறகு அந்த இரண்டு இடங்கள் மெக்கா, மற்றும் மதினா என்ற இடங்கள் என்பதை அறிந்து நான் ஆச்சரியப்பட்டு போனேன். உலகின் மற்ற பாகங்களில் இந்த மாற்றத்தை நாங்கள் காணக் கூடியதாக இல்லை. இது எனக்கு ஒரு நெகிழ்ச்சியான அனுபவம்” என்றார்.


PSSO என்ற அமைப்பானது சவுதி அரசால் லாப நோக்கமற்று நடத்தப்படும் ஒரு அமைப்பாகும். இதன் மூலம் மக்களுக்கு அறிவியலின் முக்கியத்துவத்தையும், விண்வெளியின் பல புதிர்களை விடுவித்து மக்களுக்கு அதன் அறிவை சேர்ப்பிக்கும் ஒரு அமைப்பாகவும் செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக இளவரசர் சுல்தான் பின் சல்மான் செயல்பட்டு வருகிறார்.


இந்த நிகழ்ச்சியில் மதினா நகரத்து மேயர் பேசும் போது ‘நீங்கள் ரஷ்ய தேசத்தவராக இருக்கலாம். ஆனால் உலக மக்களுக்கு விண்வெளி வீரர்களான நீங்கள் பொதுவானவர்கள். அது போல் நானும் சவுதிக்கு மட்டும் சொந்தமானவல்ல. உலக மக்களுக்கு பொதுவானவன். நாம் அனைவரும் இந்த உலக மக்களுக்கு சேவையாற்ற படைக்கப்பட்டுள்ளோம். 700 மில்லியன் உலக மக்களில் உங்களைப் போன்ற ஒரு சில விண்வெளி வீரர்களுக்கே விண்வெளிப் பயணம் சாத்தியமானது. நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்.


இளவரசர் சுல்தான் இந்த அமைப்பு சிறப்பாக செயல்பட மிகவும் உதவிகரமாக இருக்கிறார். இந்த அமைப்பு ஆரம்பித்த போதும் இந்த வீரர்கள் சவுதி வந்திருந்தனர். தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் வந்துள்ளனர். இவர்களின் தொடர்பானது சவுதி இளைஞர்களின் விண்வெளி ஆர்வத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.


மதினா நகரத்தின் தோற்றத்தை நீங்கள் எனக்கு விளக்கிய போது மெய் சிலிர்த்து போனேன். நீங்கள் உங்கள் கண்களால் மட்டுமே பார்க்கிறீர்கள். நான் அதோடு எனது இதயத்திலும் அந்த நிகழ்வை உள் வாங்கிக் கொண்டேன். மனித வாழ்வின் பல அரிய தத்துவங்களை நீங்கள் அனைவரும் மேலும் ஆய்வு செய்ய வேண்டும். தொலை தொடர்பு சாதனங்களை இதற்கு அதிகம் பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.



உலகில் உள்ள எத்தனையோ நகரங்கள் இதை விட அதிக ஒளி வெள்ளத்தில் மதிக்கிறது. ஆனால் குர்ஆனில் இறைவன் இந்த இரண்டு நகரங்களையும் புனித நகரங்களாக அறிவிக்கிறான். அத்தகைய புனித நகரங்கள் ஒளி வெள்ளத்தில் இந்த விண்வெளி வீரர்களுக்கு காட்சியளித்தது ஆச்சரியப்படத்தக்க ஒன்றல்ல. அதே போன்ற குர்ஆனின் உண்மை ஒளியை இந்த வீரர்களுக்கும், உலகின் பல கோடி மக்களுக்கும் அவர்களின் இதயத்தில் வல்ல இறைவன் ஏற்றுவானாக!’ என்ற பிரார்த்தனையோடு முடித்தார்.


THANKS


ADIRAIXPRESS.IN
on 5/25/2014

Sunday, May 25, 2014

வாழ்த்துக்கள் மிஸ்டர் மோடி


இன்னும் சிறிது நேரத்தில் இந்தியப் பிரதமராக மோடி பதவி ஏற்க இருக்கிறார்.

எல்லாம் வல்ல அல்லாஹ்,இந்த ஆட்சி எல்லாருக்கும் பொதுவான ஒன்றாகவும்,சிறுபான்மை மக்களின் உரிமைகளும் மதிக்கும் ஆட்சியாகவும்,ஊழலற்ற ஒன்றாகவும் அமைய அல்லாஹ் அருள் புரிவானாக.



வாழ்த்துக்கள் மிஸ்டர் மோடி

Thursday, May 22, 2014

மோடி வெற்றி குறித்து,பள்ளி வாசல் பயான்

விடுதலைக்குப் பிந்தைய பொதுத் தேர்தல்களிலேயே நடந்து முடிந்த தேர்தல் ஒருவகையில் வித்தியாசமான முடிவைத் தந்திருக்கும் தேர்தல். 282 இடங்களைப் பிடித்த பாரதிய ஜனதா கட்சியில் ஒரு எம்.பி-கூட முஸ்லிம் கிடையாது. முஸ்லிம்கள் 18% வசிக்கும் உத்தரப் பிரதேசத்திலிருந்து ஒரு முஸ்லிம்கூட வெல்லவில்லை. மத்தியப் பிரதேசத்திலிருந்தும் முஸ்லிம் எவரும் தேர்வுசெய்யப்படவில்லை. 543 தொகுதிகளில் மொத்தம் 24 பேர் மட்டுமே முஸ்லிம்கள். அதிலும் பெரும்பாலானோர் மேற்கு வங்கத்தினர். இந்திய மக்கள்தொகையில் 14% பங்குவகிக்கும் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் நாடாளுமன்றத்தில் வெறும் 4.4% மட்டுமே. 

சிதறிய முஸ்லிம் வாக்குகள்
 
மோடியின் வெற்றிவாய்ப்புகுறித்து முஸ்லிம்கள் கவலைப்பட்டதும், மாற்றுக் கட்சிகளுக்கு வாக்களிப்பதற்கு இருந்த சாத்தியமும் இயற்கைதான். ஆனால், முஸ்லிம்கள் அதிகம் உள்ள பெரும்பாலான தொகுதிகளில்கூட வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக அவர்கள் இல்லை என்பதே நிதர்சனம். மேலும், பா.ஜ.க. எதிர்ப்பின் அடையாளமான அவர்களின் வாக்குகள் பல கட்சிகளுக்கும் சிதறிப்போய் அது பா.ஜ.க-வுக்குச் சாதகமாக ஆகியிருக்கிறது என்பதை எவரும் எளிதில் புரிந்துகொள்ளலாம். சான்றாக, உத்தரப் பிரதேசத்தின் மீரட், மொராதாபாத், சம்பல் போன்ற பல தொகுதிகளில் முஸ்லிம் வேட்பாளர்கள் தமக்குள் மோதிக்கொள்ள, பா.ஜ.க. எளிதாக வெற்றிபெற்றுள்ளது. கூடுதலாகக் கவனிக்க வேண்டிய விஷயம், பா.ஜ.க-வில் போட்டியிட்ட ஐந்து முஸ்லிம்களும் தோல்வி கண்டனர். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஸ்வானின் கட்சியிலிருந்து ஒருவர் வென்றது மட்டுமே விதிவிலக்கு. தவிர, தேர்தல் முடிவு புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது, டெல்லியில் முஸ்லிம்கள் அதிகம் உள்ள சில தொகுதிகளில் முஸ்லிம்களின் வாக்குகள் பா.ஜ.க-வுக்கு ஆதரவாக விழுந்திருப்பதும் தெரியவருகிறது. வாரணாசியில் ஷியா முஸ்லிம்கள் மோடிக்கு வாக்களித்திருப்பதாகவும் தெரிகிறது. இவை விதிவிலக்குகள்தானே தவிர, பொதுவான நிலவரமாகக் கருத முடியாது.


தேர்தல் முறையின் கோளாறு
 
தேசிய ஜனநாயகக் கூட்டணி அபாரமான பெரும்பான்மை பெற்றிருக்கிறது என்றாலும், மொத்த வாக்குகளில் வெறும் 31% வாக்குகளிலேயே பா.ஜ.க. பெரும்பான்மை பெற்றுவிட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணி 38.5% வாக்குகளைப் பெற்று 336 இடங்களைப் பெற்றுவிட்டது. ஆக, வாக்குகள் சிதறியதே பா.ஜ.க-வின் மகத்தான வெற்றிக்குக் காரணமாக இருந்திருக்கிறது. புள்ளிவிவரங்களைக் குறிப்பிடுவதாலேயே பா.ஜ.க-வின் வெற்றியைக் குறைத்து மதிப்பிடுவதாக யாரும் கருதத் தேவையில்லை. 

மூன்று விஷயங்கள்
 
எது எப்படியிருந்தாலும் பா.ஜ.க. வெற்றி கண்டாயிற்று. இப்போது முஸ்லிம்களின் மனநிலை எப்படியிருக்கிறது என்பதை அலச முனையும்போது, காவிப் பரிவாரத்தின் முக்கிய கோஷங்கள் மூன்று நினைவுக்கு வருகின்றன - ராம ஜென்மபூமி, பொது சிவில் சட்டம், காஷ்மீர் பிரச்
சினை ஆகியவை. இவற்றில் ராம ஜென்மபூமி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கிறது. மற்ற இரண்டு பிரச்சினைகளையும் பா.ஜ.க. கையில் எடுக்க முடியும். ஆனால், எடுக்குமா என்பது ஒரு பெரிய கேள்வி. குறைந்தபட்சம் மாநிலங்களவையில் தனது கட்சிக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காதவரை அரசியலமைப்பில் மாற்றம் செய்யும் எந்த நடவடிக்கையிலும் பா.ஜ.க. இறங்காது. அரசியலமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றிருக்கும் ‘மதச்சார்பற்ற’ என்ற சொல்லை நீக்குவார்களோ என்று இஸ்லாமிய நண்பர்கள் சிலர் கேட்டார்கள். இப்போதைக்கு இது சாத்தியமில்லை. அதிலும் குறிப்பாக, அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரை யில் உள்ள வாசகங்களைத் திருத்துவது சாத்தியமே இல்லை.
வாக்கு எண்ணிக்கை நடந்துகொண்டிருக்கும்போது, வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு, ஒரு பள்ளி
வாசலில் பயான் (சொற்பொழிவு) ஆற்றிய இமாம் ஒருவர், “இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் தொடங்கி, சிலுவைப் போர்களையும், மங்கோலியர்களின் தாக்குதல்களையும் தாங்கி வளர்ந்தது. அன்று சந்தித்த சோதனைகளைவிட புதிதாகச் சோதனைகள் எதுவும் நமக்கு வந்துவிடப்போவதில்லை.எல்லாம் அல்லாவின் நாட்டப்படியே நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகளைக் கண்டு இஸ்லாமியர்கள் கலக்கம் கொள்ளத் தேவையில்லை” என்று கூறியதாக நண்பர் ஒருவர் தெரிவித்தார்.
இதுதான் நடப்பு நிலை. கலக்கம் கொள்ளத் தேவையில்லை என்பதல்ல, கலக்கம் கொள்வதில் பயனில்லை என்பதே சரி. என்ன நடக்குமோ என முஸ்லிம்கள் மனங்களில் சற்றே கலக்கம் இருக்கத்தான் செய்கிறது. அதிலும் குறிப்பாக, பா.ஜ.க-வின் முஸ்லிம் வேட்பாளர்கள் அனைவரும் தோற்கடிக்கப்பட்டிருப்பதால் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் பா.ஜ.க-வுக்கு எதிராக வாக்களித்திருப்பதாகவும் குற்றம் சாட்டப்படும் சாத்தியம் இருக்கிறது.
ஆட்சிப் பொறுப்பேற்கிற மோடியும் பா.ஜ.க-வும் வெளிப்படையாக முஸ்லிம்களைத் தாக்கிப் பேசவோ, முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கவோ இல்லை.
ஆரம்ப கட்டத்திலேயே தமது பிம்பத்தைக் குலைத்துக்கொள்ள முனைய மாட்டார்கள் என்பது என் நம்பிக்கை. பிரதமராக மோடியின் உடனடிக் கவனம் வெளிப்
படையாகப் பார்க்கும்போது வளர்ச்சி, விலைவாசி, ஊழல் போன்றவற்றின் மீதுதான் இருக்குமென்று இப்போதைக்குத் தெரிகிறது. ஆனால், சங்கப் பரிவாரத்தின் அடிப்படைக் கொள்கைகள், நோக்கங்களை மோடி அரசு எப்படிக் கையாளும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
- ஆர். ஷாஜஹான், எழுத்தாளர், தொடர்புக்கு: shahjahanr@gmail.com

THE HINDU,TAMIL 
 வெள்ளி, மே 23, 2014

Tuesday, May 20, 2014

அல்லாஹ் நாடினால்,மோடி இஸ்லாம் தழுவுவார்?

நம் உயிரினும் மேலான நம் பெருமானார் ஸல் அவர்களை கொல்ல வந்தவர்கள் தான் உமர் ரலி அவர்கள்.ஆனால் அவர்கள்தான் இஸ்லாத்தின் இரும்புத் தூணாய் ஆகிப் போனார்கள்.

முஸ்லிம்களை கொன்று குவித்து துவம்சம் செய்த ஸெங்கிஸ்கான் இறுதியில் இஸ்லாத்தை ஏற்றார்.

ஸ்விஸ்ஸில் மினாரா கட்ட தடை கண்டவர்,இன்று இஸ்லாத்தை ஏற்று,ஐரோப்பாவிலேயே முதல் இஸ்லாமிய கட்சியை தொடங்கியுள்ளார்.

பாபர் பள்ளியை தகர்த்த பலர் இன்று இஸ்லாத்தை ஏற்று - பல பள்ளிகளை கட்டிக் கொண்டுள்ளனர்.

இன்னும் பல சாட்சிகள் ................

இறைவன் நாடினால்,நாளை நரேந்திர மோடியும் புனித இஸ்லாத்தை ஏற்று - பல ஆயிரம் பள்ளிவாசல் கட்டப்படவும்,முதல் முஸ்லிம் பிரதமர் என பெயரெடுக்கவும் செய்யலாம்,rss அமைப்பு ரசூலுல்லாஹ் சேவக் சங் என மாற்றம் பெறலாம்.அல்லாஹ்வுக்கு எதுவும் முடியும்,எல்லாமும் முடியும்.

நாம் செய்ய வேண்டியது,பொறுமை,தொழுகை,துவா.எனவே,யாரையும் திட்டுவதும்,பழிப்பதும் மிக தவறு.அல்லாஹ் நம்மை வழி
நடத்த போதுமானவன்.

ஏன் நரேந்திர மோடிக்கும், மோகன் பகவத்துக்கு “ஹிதாயத்தை கொடு யா அல்லாஹ்” என்று ஏன் கேட்க மறுக்கின்றோம்?

முந்தைய பதிவில் நபி(ஸல்) அவர்களும் நபித்தோழர்களும் பிறர் நலம் நாடுபவர்களாக இருந்துள்ளார்கள் என்பதை அறிந்தோம், படிப்பினை பெற்றோம். அரசியல் சாக்கடையில் பெரும்பாலான முஸ்லீம் சகோதரர்கள், ஒருவரை ஒருவர் குறைக்கூறி பிறர் நலம் நாடாதவர்களாக உள்ளார்கள் என்பதை அறிந்தோம்.
இன்றைய இந்திய அரசியல் சூழலில் முஸ்லீம்கள் விரும்பாத ஓர் ஆட்சி மாற்றம் மத்தியில் பா ஜ க தலைமையில் பதவி ஏற்க உள்ளது. இந்திய முஸ்லீம்களிடம் மட்டுமல்ல உலக முஸ்லீம்களிடமும் ஓர் அச்ச உணர்வு பொதுவாக ஏற்பட்டுள்ளது என்பதை யாரும் மறுக்க இயலாது. இந்த சூழலில் முஸ்லீம்கள், குறிப்பாக தமிழ்நாட்டு முஸ்லீம்கள் தங்களுடைய விரக்தியை இணைய தளங்களிலும், முகநூல்களிலும், whatsup messengerகளிலும் கருத்துப் பறிமாற்றத்தின் மூலம் சிலர் நாகரீகமாகவும், பெரும்பாலானவர்கள் அநாகரீகமாகவும் பதிவு செய்து வருகிறார்கள். தமிழ்நாட்டு மக்களுக்கு உணர்ச்சிகளை தூண்ட ஏகப்பட்ட இயக்கங்கள் உள்ளது இந்த சூழலில் நிதானத்தையும் பொறுமையையும் கடைப்பிடித்து அறிவுப்பூர்வமாக சிந்திப்பது காலத்தின் கட்டாயம்.
நமக்கு ஓர் தீர்வு வேண்டும் என்றால் அதற்கான அற்புதமான வழிகள் குர்ஆனிலும், நம் உயிரினும் மேலான அண்ணல் நபி(ஸல்) அவர்களின் அழகிய வழிகாட்டுதல்களிலுல் உள்ளது என்பதை நாம் அனைவரும் அறிந்துள்ளோம், ஆனால் உணர்ச்சிவசப்படுவதற்கு முக்கியத்துவம் கொடுத்து, அல்லாஹ்வும் அவன் தூதரும் காட்டித் தந்த வழிமுறைகளை பல நேரங்களில் மறந்துவிடுகிறோம்.
“ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது; அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்” என்று (நபியே!) நீர் கூறும்; முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக! (திருக்குர்ஆன் 9:50)
எந்த ஒரு செயல் நடந்தாலும் அது அல்லாஹ்வின் நாட்டப்படியே நடைபெறுகிறது என்பதை முஸ்லீம்களாகிய நாம் ஒவ்வொருவரும் நம்பவேண்டும் என்பதை மேல் குறிப்பிட்ட இறைவசனம் தெளிவாக நமக்கு எடுத்துரைக்கிறது.. ஒரு செயல் நமக்கு சாதகமாக இருக்கும் என்றிருந்தால், அல்லாஹ் அதில் நமக்கு ஏதோ ஓர் சோதனையை வைத்திருக்கிறான் என்று நம்ப வேண்டும். எந்த ஒரு செயல் நமக்கு பாதகமாக அமையப் போகிறது என்றிருந்தால், அல்லாஹ் அதில் ஏதோ ஓர் நல்லதை நாடி இருக்கிறான் என்று நல்லெண்ணம் வைக்க வேண்டும்.
…..நீங்கள் பொறுமையுடனும், பயபக்தியுடனுமிருந்தால் அவர்களுடைய சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீமையும் செய்யாது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை (எல்லாம்) சூழ்ந்து அறிகிறவன். (திருக்குர்ஆன் 3:120)
நாம் அல்லாஹ்வின் அச்சத்தோடும், அவன் நம்பிக்கையோடும், பொறுமையோடும் இருந்தோமையானால், எந்த எதிரியின் சூழ்ச்சியும் நம்மை தீண்டாது என்று இந்த திருக்குர்ஆன் வசனத்திலிருந்து  நாம் தெளிவடையலாம். எந்த ஒரு தருணத்திலும் ஒரு முஃமீன் அல்லாஹ் மேல் உள்ள நம்பிக்கையில் ஒடு துளி அளவும் சந்தேகம்  அடைய மாட்டான்.
இஸ்லாமிய வரலாற்றில் ஒவ்வொரு முக்கிய நிகழ்வுகளிலும், சோதனையான காலகட்டத்திலும், அல்லாஹ்வுடைய தூதருடைய ஈமானையும், சத்தியத் தோழர்களுடைய ஈமானையும் அல்லாஹ் சோதித்தான், அவர்கள் பொறுமையாக இருந்தார்கள், ஈமானில் உறுதியாக இருந்தால், அல்லாஹ்வின் மேல் முழு நம்பிக்கை வைத்திருந்தார்கள், அல்லாஹ் பல வெற்றிகளை கொடுத்தான். நாளை மறுமையிலும் அவர்களுக்கு கொடுப்பதாக வாக்களித்துள்ளான்.
உதாரணமாக இதோ சில நினைவூட்டல்கள்.
இஸ்லாத்திற்காக தன்னுடைய உடல் பொருள் சொத்துக்கள் அனைத்தையும் அர்ப்பணித்த உம்முல் முஃமினீன் ஹதீஜா(ரலி) அவர்களின் மரணம் நிகழ்வும், இதனால் நபி(ஸல்) அவர்கள் தன்னுடய வாழ்நாட்களில் மிகவும் மனதளவில் தளர்ந்த அந்த கால கட்டமாக இருக்கட்டும்.
இஸ்லாத்தை ஏற்ற ஒரே காரணத்தால், தன்னுடைய அருமை மகள்களின் திருமண வாழ்க்கையை இழந்து விதவையான துன்பகரமான சம்பவங்களாகட்டும்.
நபி(ஸல்) அவர்கள் உறவுகள், உடமைகள், சொத்துக்களை விட்டுவிட்டு மக்கா என்ற சொந்த ஊரைவிட்டு விரட்டப்பட்ட நிகழ்வாக இருக்கட்டும்.
நபி(ஸல்) அவர்கள் தாயிப் நகரில் சிறுவர்களால் கல்லடி வாங்கிய கொடூர நிகழ்வாக இருக்கட்டும்,
இறை நிராகரிப்பளர்களால் திணிக்கப்பட்ட பத்ருப் போர்களம் பின்னர் வந்த உஹது, ஹந்தக் போர்களங்காகட்டும்.
சமூக பரிஷ்காரங்களினால் ஏற்பட்ட கொடுமைகள், பசி பட்டினி போன்ற சோக நிகழ்வாகட்டும்.
பிலால்(ரலி), மிக்தாத்(ரலி), சுமைய்யா(ரலி), யாசிர்(ரலி) ஆகியோர் நபி(ஸல்) அவர்கள் கண்ணெதிரே இஸ்லாத்தை ஏற்ற காரணத்தால் கொடூரமான முறையில் குரைசிக் இறை நிராகரிப்பாளர்களால் துன்புறுத்தப்பட்ட காலமாகட்டும்.
அழுகிய குடல்களை நபி(ஸல்) அவர்கள் மேல் வைத்து மக்கா குரைசிகள் அகங்காரத்துடன் சிரித்துக் கொண்டாடிய போது, அகிலத்தின் அருட்கொடை பொறுமைசாலிகளின் தலைவரான அண்ணல் நபி(ஸல்) அவர்களும், இஸ்லாத்தின் தங்கத் தாரகை நபி(ஸல்) அவர்களின் அருமை மகளார் ஃபாத்திமா(ரலி) அவர்களும் பொறுமையோடு அல்லாஹ்வை அஞ்சியவர்களாக இருந்து, அவனிடமே பிரார்த்தனை செய்த நிகழ்வாகட்டும்.
முஸ்லீமான ஒருவர் அல்லாஹ்வுக்கு பிறகு அதிக அளவில் நேசிக்கும் ஒரே மனிதர் அண்ணல் நபி(ஸல்) அவர்கள். அந்த நபி(ஸல்) அவர்களின் மரணத்தினால் மதீனாவே இருண்டு, உத்தமத் தோழர்கள் சோகத்தின் உச்சியில் இருந்த குழப்பமான சூழ்நிலையாகட்டும்.
இஸ்லாம் நிலப்பரப்பளவில் வளர்ந்து வந்த காலச்சூழலில், யூதக் கைக்கூலி ஒருவனால் அமீருள் முஃமினீன் உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டு, முஸ்லீம்கள் மிகப்பெரிய பின்னடைவான சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட அந்த நிகழ்வாகட்டும்.
பின்னர் உஸ்மான் (ரலி) அவர்களும், அலி(ரலி) அவர்களும், ஹஸன்(ரலி) ஹுசைன் (ரலி) ஆகிய்யோரும் கொடூரக்காரர்களால் மிகக் கொடூரமாக கொல்லப்பட்ட போது ஏற்பட்ட குழப்பமான காலகட்டங்களாகட்டும்.
இப்படி ஆயிரக் கணக்கான நிகழ்வுகளை எடுத்துக் கொண்டால், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தூய இஸ்லாத்தின்படி வாழ்ந்த மக்கள்  பொறுமையாக இருந்தார்கள், நிதானத்தை கடைப்பிடித்தார்கள், அல்லாஹ்வை அஞ்சினார்கள், அல்லாஹ்வை நம்பினார்கள், அவனிடமே வேண்டினார்கள். அல்லாஹ் அவர்களை சோதித்தான், சோதனையில் ஈமானில் உறுயோடு இருந்து வெற்றிகள் பல கண்டு அல்லாஹ்வின் பொருத்தத்துக்கு உரியவர்களாக தங்களை முன்னுதரணமாக்கிக் கொண்டார்கள். இஸ்லாத்திற்காக என்னற்ற தியாகங்கள் செய்த நல்லோர்களின் செயல்களை அல்லாஹ் பெருந்திக் கொள்வானாக.
நமக்கு முன் மாதிரி நபி(ஸல்) அவர்கள் என்பதை நம்புகிறோம், ஆனால் அவர்களின் வழிகாட்டுதலை மறந்துவிடுகிறோம். நபி(ஸல்) அவர்களுக்கும் நபித்தோழர்களுக்கும் கொடுமைகள் கொடுத்தவர்களுக்கு ஹிதாயத் கிடைக்க, நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள் என்ற ஹதீஸ்கள் ஏராளம் நாம் அறிந்ததே. ஆனால் இவைகள் எல்லாம் உண்மை என்று நம்பும் நம்முடைய வாழ்வில் அதனை நடைமுறைப் படுத்துகிறோமா?
குஜராத்தில் ஆயிரக் கணக்கான அப்பாவி முஸ்லீம்களை கொன்று குவிக்க பேருதவி செய்த நரபலி மோடி இன்று நம் தாய்நாட்டின் பிரதம மந்திரியாக தேர்த்தெடுக்கப்பட்டிருப்பதை எந்த ஒரு முஸ்லீமாலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இது மனித சமுதாயத்திற்கு ஏற்பட்டிருக்கும் கை சேதம். ஆனால் இது அல்லாஹ்வின் நாட்டம். இதில் நமக்கு நல்ல படிப்பினையை அல்லாஹ் வைத்துள்ளான் என்று எண்ணுவது தானே முஸ்லீம்களின் அறிவார்ந்த செயலாக இருக்க முடியும்?
நமக்கு எதிராக நடைபெறும் கொடுமைகளை எதிர்த்து குரல்கொடுக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் இன்று முஸ்லீம்கள் செய்வது என்ன? இன்றைய இந்திய அரசியல் நடப்புகளை வைத்து, பொறுமை இழந்து ஏதோ சினிமாத்தனமான நகைச்சுவையை பதிவுகளாகவும், புகைப்படங்களாகவும், காணொளிகளாகவும். மேலும் கோபத்தின் விரக்தியில் சங்பரிவார்களை வசைமாறி பொழிந்து தள்ளுகிறார்கள். இவைகளை நமக்கு எந்த வகையில் பயனளிக்கும் என்பதை முஸ்லீம் சமூகம் சிந்திக்க வேண்டும்?
முஸ்லீம்கள் நம்முடைய சமுதாயம் வீரத்திற்கு பெயர் எடுத்த முன்னுதாரன சமுதாயம் என்பது எப்படி உலகம் அறிந்து வைத்துள்ளதோ, அது போல் நன்னடத்தையிலும், நற்பண்புகளிலும், பொறுமை காப்பதிலும் முன்னுதாரன சமுதாயம் என்பதும் வரலாறு உண்மை படுத்துகிறது. ஆனால் இன்று உணர்ச்சிவசப்படும் சமூகமாக நம்மை மாற்ற நினைக்கும் சக்திகளின் சூழ்ச்சிகளுக்கு கடந்த சில வருடங்களாக நாம் அடிமையாகி பொறுமை இழந்து, நற்பண்புகளை இழந்த சமுதாயமாக மாறிவிட்டோமோ என்கிற  சந்தேகம் எழுவதை தவிற்க இயலவில்லை.
இஸ்லாமிய விரோதத்தை கண்டு போராட்ட குணம் என்ற தோரணையில் உணர்ச்சிவசப்பபடுவதை கையில் எடுக்கும் நம் சமுதாயம், ஏன் மாற்றி யோசிக்க தங்குகிறோம்? ஏன் நரேந்திர மோடிக்கும், மோகன் பகவத்துக்கு “ஹிதாயத்தை கொடு யா அல்லாஹ்” என்று ஏன் கேட்க மறுக்கின்றோம்?  அல்லாஹ் ரப்புல் ஆலமீன் எத்தனையோ இஸ்லாமிய விரோதிகளின் மனத்தை மாற்றி உள்ளான். இது இன்றும் நடந்து வருகிறது. ஏன் மோடியையும் இன்னும் பிற சங் பரிவார்களின் முக்கியப் புள்ளிகளின் மனதை அல்லாஹ் மாற்ற மாட்டான் என்ற நம்பிக்கை இல்லையா? அவர்களுக்கு ஹிதாயத் கொடுக்க மாட்டான் என்று நம்ப தயங்குகிறோம்?
நாம் எந்த காலச்சூழ்நிலையிலும் மனிதர்களுகாக ஏன் அச்சப்பட வேண்டும்? நான் மேல் குறிப்பிட்ட திருகுர்ஆன் வசனம் நமக்கு நல்ல ஆறுதல் தரும், மீண்டும் அதனை நினைவூட்டுகிறேன்.
…..நீங்கள் பொறுமையுடனும், பயபக்தியுடனுமிருந்தால் அவர்களுடைய சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீமையும் செய்யாது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை (எல்லாம்) சூழ்ந்து அறிகிறவன். (திருக்குர்ஆன் 3:120)
நாம் அனைவரும் பொறுமையுடையோராக இருப்போம், அல்லாஹ்வை அஞ்சியவர்களாக இருப்போம், அவனை மட்டுமே நம்பியவர்களாக இருப்போம், அவனிடமே பாதுகாப்பு பெறுவோம்.
எவரேனும் இவ்வுலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தையும் (மட்டுமே) நாடினால் அவர்களுடைய செயல்களுக்குரிய (பலன்களை) இவ்வுலகத்திலேயே நிறைவேற்றுவோம்; அவற்றில், அவர்கள் குறைவு செய்யப்பட மாட்டார்கள். (திருக்குர்ஆன் 11:15)
இன்னும் நேர் வழிகாட்டுதல் அல்லாஹ்வின் மீதே இருக்கிறது; (அவனருளை அடைய முடியாத) தவறான (பாதைகளும்) இருக்கின்றன;மேலும், அல்லாஹ் நாடினால் உங்கள் அனைவரையும் நிச்சயமாக நேர்வழியில் சேர்த்துவிடுவான்.  (திருக்குர்ஆன் 16:9)
அல்லாஹ் தான் நாடியோரை நேர்வழி படுத்துகிறான். தான் நாடியோரை வழி தவற செய்கிறான்.
“யா அல்லாஹ் எங்களது தாய்நாட்டில் முஸ்லீம்கள்களின் எதிரிகளான பாசீச சங்பரிவார்களின் முக்கியத் தலைவர்களை நீ கண்ணியப்படுத்த நாடினால் அவர்களுக்கு ஹிதாயத் கொடு, அவர்களை  நீ கேவலப்படுத்த நாடினால், இவ்வுலகிலும் மறு உலகிலும் கேவலப்படுத்து”
யா அல்லாஹ்! எங்கள் அனைவரையும், சத்திய சஹாபாக்கள் எவ்வாறு குர்ஆன் மற்றும் நபி(ஸல்) அவர்களின் சொல் செயல் ஆகியவற்றின் அங்கீகாரத்தின் அடிப்படையில் வாழ்ந்தார்களோ அதுபோல் எங்கள் அனைவரையும் வாழ அருள் புரிவாயாக.
தொடரும்..
M.தாஜுதீன்
 
 http://adirainirubar.blogspot.com/2014/05/36_21.html

Friday, May 16, 2014

அன்புள்ள இந்தியப் பிரதமர் மோடிக்கு!

முதல் சங்கு ஊதியாச்சு!

 (நபியே!) நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்; இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்; நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்; நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்; நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன அனைத்துப் பொருட்கள் மீதும் நிச்சயமாக நீ ஆற்றலுடையவனாக இருக்கின்றாய்.” 3:26

நடந்து முடிந்த தேர்தல் மூலம் இந்திய மக்கள் பா ஜ க வை அதிகளவில் வெற்றி பெற செய்து,நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்க உள்ளார்.பொதுவாக பா ஜ க அதன் தலைமை அமைப்பான rss என்ன சொல்கிறதோ அதன் படிதான் எதுவும் செய்யும்.அதன்படி அவர்களுக்கு கிடைத்த இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி,முஸ்லிம்கள்,கிறிஸ்தவர்கள் போன்ற மத சிறுபான்மை சமுதாயங்களுக்கு பல வகைகளிலும் இடையூறுகள் விளைவிக்க கூடும்.பாபர் பள்ளிவாசல் இடிக்கப்பட்ட இடத்தில் ராமன் கோயிலும்,civil code சட்டமும் இயற்றக்கூடும்.இன்னும் என்ன என்ன அவர்களின் அஜெண்டாவில் இருக்கிறதோ அவைகளை நடைமுறைப் படுத்தக் கூடும்.

இது உண்மையில் முஸ்லிம்களுக்கு மிக மிக சோதனையான கால கட்டம் என்பதில் சந்தேகம் இல்லை.எனவே,நாம் அல்லாஹ்விடம் இரு கரம் ஏந்தி துவா செய்து,நாம் நம் ஈமானை காப்பாற்றிக் கொள்ள,நமக்கிடையே பலப்படுத்திக் கொள்ள வேண்டும்.ஒவ்வொரு முஸ்லிமும் மற்ற முஸ்லிம்களிடம் நல்ல உறவைப் பேணி,ஒற்றுமை பேண வேண்டும்.இந்து மற்றும் கிறிஸ்தவ சகோதரர்களோடும் நல்ல உறவை பேணி,நம் மார்க்கத்தை இனிய முறையில் சொல்ல வேண்டும்.ஊர் தோறும் இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் நடத்தப் பட்டு,இதுதான் இஸ்லாம் என்று அவர்களுக்கு எடுத்து சொல்லி,இஸ்லாம் மூலமாக யாருக்கும் எவ்வித அழிவோ,துர்பாக்கியமோ கிடையாது,அமைதியும் வெற்றியும்தான் கிடைக்கும் என்பதை புரிய வைக்க வேண்டும்.

இப்படி,நம்மாள் இயன்ற அளவு - இனிய மார்க்கம் எடுத்து சொல்லி,அமைதி வழி புரட்சி ஏற்பட அடிகோலவேண்டும்.உலகெங்கும்,எங்கெல்லாம் முஸ்லிம்களுக்கு எதிரான செயல்கள் திட்டமிட்டு நடைபெறுகின்றனவோ,அங்கெல்லாம் இஸ்லாம் புத்துயிர் பெற்று வந்துள்ளது என்பதை நம் வரலாறு சொல்லும் செய்தி.எனவே,தோல்விக்குப் பின் வெற்றியும்,அடக்குமுறைகளுக்குப் பின் ஆட்சிகளும் முஸ்லிம்களுக்கு கிடைத்துள்ளன.இதுதான் பிறவ்ன்,நம்ரூத் முதற்கொண்டு,அபூ லஹப்,அபூ ஜஹல் வரையும் சேங்கிஸ்கான் முதற்கொண்டு இன்றைய நவீன உலகின் பூச்சாண்டிகள் வரை பார்த்து வந்து கொண்டு இருக்கிறோம்.அந்த அந்த கால கட்டங்களில் வாழ்ந்த முஸ்லிம்கள் விவரிக்க இயலா துயரங்கள் பட்டும் அவர்களை துடைத்தெறிய இயலவில்லை.இஸ்லாம் மேலோங்கியே வந்துள்ளது,கியாம நாள் வரை மேலோங்கியே இருக்கும்.
42:42. ஆனால் எவர்கள் மக்களுக்கு அநியாயம் செய்து நீதமின்றி பூமியில் அட்டூழியம் செய்கிறார்களோ, அவர்கள் மீது தான் (குற்றம் சுமத்த) வழியிருக்கிறது - இத்தகையோருக்கு நோவினை செய்யும் வேதனையுண்டு.

53:52. இவர்களுக்கு முன்னர் இருந்த நூஹுவுடைய சமூகத்தாரையும் (அவன் தான் அழித்தான்,) நிச்சயமாக அவர்கள் பெரும் அநியாயக் காரர்களாகவும், அட்டூழியம் செய்தவர்களாகவும் இருந்தனர்.

6620. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.
அகழ்ப்போரின்போது நபி(ஸல்) அவர்கள் எங்களுடன் மண்ணைச் சுமந்து எடுத்துச் சென்று கொண்டிருப்பதை கண்டேன். அப்போது அவர்கள் (இவ்வாறு பாடிய வண்ணம்) கூறிக் கொண்டிருந்தார்கள்.
அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் இல்லாவிட்டால் நாங்கள் நேர்வழி அடைந்திருக்கமாட்டோம். நோன்பு நோற்றிருக்கமாட்டோம். தொழுதிருக்கவுமாட்டோம்.
நாங்கள் பகைவர்களைச் சந்திக்கும்போது எங்களின் மீது அமைதியை இறக்கியருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! இணைவைப்போர் எங்களின் மீது அட்டூழியம் புரிந்துவிட்டார்கள். இவர்கள் எங்களைச் சோதனையில் ஆழ்த்த விரும்பினால் அதற்கு நாங்கள் இடம் தரமாட்டோம்.30

ஆகவே,முஸ்லிம்கள் மற்றும் பிற மத சிறுபான்மையோரை கருவருக்கலாம் என அவர்கள் கனா கண்டால்,அது இன்ஷா அல்லாஹ் பலிக்காது என்பது மட்டுமல்ல அது ஒரு பெரிய அழிவையே அவர்களுக்கு தேடித் தரும்,இதுவே வரலாறு சொல்லும் பாடமாகும்.

இந்திய மக்கள் இன்று தந்துள்ள இத் தீர்ப்பைக் கொண்டு ஆட்சிக் கட்டிலில் அமரவுள்ள நரேந்திர மோடி அவர்களே,உங்களுக்கு ஏக இறைவன் இப் பொறுப்பை தந்துள்ளான்.அந்தப் பொறுப்பை நீங்கள் சரியாக நிறைவேற்ற வேண்டும்.இக்கணம் முதல் முஸ்லிம்கள்,கிறிஸ்தவர்கள் உட்பட அனைவருக்கும் நீங்கள்தான் பிரதமர் என்பதை மறந்து விட வேண்டாம்.
எனவே, இந்துக்களுக்கு என்ன வேண்டுமோ அதை செய்து கொடுங்கள்.மனு தர்மப்படிதான் அவர்களுக்கு எல்லா சகல வித சடங்குகள்,செயல்கள் செய்ய வேண்டுமா?கல்யாணமா,மரணமா,இப்படி என்னவெல்லாம் உண்டோ அதை தாராளமாக செய்யுங்கள்.அவர்களுடன் எங்களையும்,கிறிஸ்தவர்களையும்,புத்த,ஜைன,சீக்கிய மக்களையும் இப்படிதான் செய்ய வேண்டும் என கட்டாயப் படுத்தாதீர்கள்.


முஸ்லிம்களுக்கென்று குரானும்,நபிகள் நாயகம் ஸல் அவர்களின் போதனைகளும் இருக்கின்றன.அந்த இரண்டின் படிதான் ஒரு முஸ்லிம் வாழ வேண்டும் என பணிக்கப்பட்டுள்ளோம்.எனவே,அந்த முறையில் வாழ எங்களுக்கு எல்லாவித சகல சவுகரியங்களும் செய்ய வேண்டியது இந்தியப் பிரதமராக பதவி ஏற்க இருக்கும் உங்கள் கடமையாகும்.அனைத்து தரப்பு மக்களும் - இந்திய மக்கள் என்ற உணர்வுடன் வாழ இது மிக அவசியமாகும்.

அதை எல்லாம் விட்டுவிட்டு,நீங்கள் பாபர் பள்ளிவாசல் இடத்தில் ராமர் கோயில் கட்டினாலோ,எல்லாருக்கும் பொதுவான முறையில் civil code கொண்டு வந்தாலோ,முஸ்லிம்கள் உட்பட்ட ஏனைய சிறுபானமை மத மக்களின் உரிமைகளை பறித்தாலோ,முதலில் நீங்கள் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி ஆட்சி செய்ய தகுதியற்றவர் ஆகிவிடுவீர்கள்.ஏனெனில் இந்திய அரசியலமைப்பு சட்டம் ஒரு secular state என்று உருவாக்கப்பட்டதாகும்.இரண்டாவது,இறைவன் உங்களுக்கு இந்த ஆட்சியை வழங்கியுள்ளதன் நோக்கம் எல்லா மக்களுக்கும் சரி சமமாக நடக்க வேண்டும் என்றுதான்,அதை மீறிய குற்றத்திற்கு உள்ளாவீர்கள்.மூன்றாவது,யாரும் தொடர்ச்சியாக அநியாயம் செய்து கொண்டிருந்ததாக சரித்திரம் கிடையாது.அப்படி இருந்தவர்கள் இறுதியில் பெரும் தோல்வியையும் ,அவமானத்தையும் தான் கண்டார்கள்.கடைசியாக,வேறு வழியே இல்லை என்றால்,முஸ்லிம்கள் தங்களுக்கென கபுரை தோண்டிவிட்டு,கபன் உடை தரித்து,தயாராகவே இருப்பார்கள்,இன்ஷா அல்லாஹ்...


2:153. நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும்(இறைவனிடம்) உதவி தேடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்.

 2:155. நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!

 2:156. (பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள்.


Thursday, May 15, 2014

அபாய அறிவிப்பு!

ஆட்சி அமைப்பதற்கு முன்பாகவே ராமன் கோயில் கட்டுவது உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ். அஜண்டாவைச் செயல்படுத்திட அழுத்தம் கொடுக்கும் போக்கு கிளம்பி விட்டது. இந்த நிலையில் பி.ஜே.பி.க்கு ஆதரவு கொடுப்பது குறித்து மாநில அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நன்கு சிந்திக்க வேண்டும் என்று எச்சரிக்கை கலந்த அறிக்கையினை திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி விடுத்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில்,   ‘’தேர்தல் முடிவுகள் நாளை வருமுன்பே - ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் நிறுத்தப்பட்டுள்ள நரேந்திரமோடி - முழுப் பெரும்பான்மையுடனோ, அல்லது மற்ற கட்சிகளின் ஆதரவைப் பெற்றோ, மத்தியில் ஆட்சி அமைக்கப் போவதாக ஊடகங்களின் உதவியோடு திட்டமிடப்படுகின்ற நிலையில், வரும் செய்திகள் எப்படிப்பட்ட பச்சை இந்து மதவெறித்தனத்தின் வெளிப்பாடான ஹிந்துத்து வத்தை அமுல்படுத்த துடித்துக் கொண்டிருக்கும் ஆட்சியாக அமைய வேண்டுமென ஆர்.எஸ். எஸ். கட்சித் தலைமை, மோடிக்கு ஆணை பிறப்பிக்கத் தொடங்கி விட்டது.
மதயானை வரும் பின்னே!
“யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே” என்பது பழைய (பழ) மொழி!
மத யானை வரும் பின்னே, மதவெறியை பரப்பி நாட்டை மீண்டும் 1992க்கே கொண்டு செல்லும் ஆணைகளின் ஆர்ப்பரிப்பு ஓசை வரும் முன்னே” என்பது புதிய அரசியல் மொழியாகும்!
இன்றைய “இந்து” ஆங்கில நாளேட்டில் முதற் பக்கத்தில் வந்துள்ள தலைப்புக்கள் மேற்கூறிய கருத்துக்களைத் தெளிவாகப்பறை சாற்றுகின்றன:
எம்.ஜி. வைத்யா கூறுகிறார்”
“modi must deliver on ram temple: -rss leader m.g.vaidya wants progress on article 370, uniform civil code”
-இந்துவில் வெளிவந்துள்ளதை அப்படியே தருகிறோம்.

இதைச் சொன்ன ஆர்.எஸ்.எஸ். தலைவரிடம் செய்தியாளர் ஒரு கேள்வி கேட்கிறார்; “ஏற்படும் என்று எண்ணு கிற பி.ஜே.பி. அரசு செயல்படுவதற்கு இது தடையாக அமையாதா?” அந்த பதில்ஆர்.எஸ்.எஸ். கொள் கை விளக்க எழுத்தாளரான சுதிர் பதக் (பெரும்பாலும் அனைவரும் பார்ப்பனர்களே) பதில் கூறியு ள்ளார்.

“நான் அப்படி நினைக்கவில்லை; இப்போதுள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையும், பா.ஜ.க., தலைமையும் எல்லாம் ஒரே சம வயதுடையவர்கள்; எனவே எங்களால் தந்திரமாக முன்பு தந்திரமாக இருந்த பா.ஜ.க. அரசுகளைவிட சமாளிக்க முடியும்” அது மட்டுமல்ல மோடி அரசு மற்றும் சில ஆர்.எஸ்.எஸ்., முக்கிய அடிப்படை கொள்கைகளையும் செயல்படுத்தும் என்றும் கூட சொல்லியிருப்பது அடுத்து நாட்டுக்கு, வரவிருக்கும் ஆபத்தும் சூழ்நிலையும் பற்றிய மணியோசைகள் ஆகும்! நாகபுரி மூத்த பேராசிரியரின் கருத்துஇதுவும் நம்முடைய கருத்தல்ல; அதே செய்தியில் கீழே உள்ள ஒரு மூத்த பேராசிரியர் ஜம்புல்கர் கூறிய கருத்து:
“they sangh parivar may even go on their own and try to fast-track these issues, but it will be interesting to see if modi budges under this pressure.  but the dangers of a communal flare -up will always be there now”
“ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார் மிக வேகமான முறையில் போகக் கூடும்; இம்மாதிரி பிரச்சினை விரைந்து முடிக்க மோடி இந்த நிர்ப்பந்தங்களுக்கு அடிபணிந்து செயல்பட்டால், வகுப்புக் கலவரங்கள் வெடிக்கும் அபாயம் ஏற்படக் கூடும்” என்று நாகபுரிப் பல்கலைக் கழகப் பேராசிரியர் விகாஸ் ஜம்புல்கர் (இவர் அவர்கள் அரசியல் விஞ்ஞானம் போதிக்கும் கல்வியாளரானபேராசிரியர்).

எப்படிப்பட்ட அபாய அறிவிப்புக்கள் பார்த்தீர்களா? மாநிலக் கட்சிகளின் தலைவர்களின் சிந்தனைக்கு... இவர்களுக்குத் தங்கள் ஆதரவைத் தரத் துடிக்கும், அதன் மூலம் தங்களுக்குள்ள பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளலாம் என்று எண்ணிடும் மாநிலக் கட்சிகளின் தலைவர்களே, முதல்வர்களே, இ
ந்த நிலைமை நாட்டில் ஏற்பட நீங்களும் காரணமாகி,வரலாற்றுப் பழி ஏற்கப் போகிறீர்களா?

காலந் தாழ்ந்தாவது வருந்துவீர்! யோசியுங்கள்: கொள்ளிக்கட்டை என்று தெரியாமலோ, புரியாமலோ அதை எடுத்து தலையைச் சொரிய ஆசைப்பட்ட, அப்பாவித்தனமாக வரலாறு அறியாது வாக்களித்த தீராத இணையத்து விளையாட்டு விடலைகளே, காலந் தாழ்ந்தாவதுவளர்ச்சி என்ற ‘மயக்க பிஸ்கெட்’ பற்றிப் புரிந்து வருந்துங்கள்.
“வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்” - குறள் (435)’’என்று தெரிவித்துள்ளார்.

 http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=121749

Wednesday, May 14, 2014

ராமர் கோயில் கட்டு-மோடிக்கு RSS பரபரப்பு உத்தரவு,முடிவு வெளிவருமுன்பே ஆணவம்!!

பாராளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்று கருதப்படுகிறது.  நரேந்திரமோடி பிரதமராவது உறுதி என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், ராமர்கோவில் கட்டப்படும் என நரேந்திரமோடி வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். திடீர் நிபந்தனை விதித்துள்ளது.  

370 வது சட்டப்பிரிவை ரத்து செய்வது, பொது சிவில் சட்டம் கொண்டு வருவது குறித்தும் அறிவிக்க வேண்டும் என்று வலியுத்தியுள்ளது.

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=121731

Sunday, May 11, 2014

அதிர்ச்சி செய்தி!கவனமாகப் படிக்கவும்!!

சென்னையைச் சேர்ந்த அந்த இளம்பெண், தன் சக அலுவலக நண்பருடன் எடுத்த புகைப்படங்களை எப்போதோ ஃபேஸ்புக்கில் போஸ்ட் செய்திருக்கிறார். ஒரு மாதத்துக்கு முன் அவருக்குத் திருமணம் நடந்திருக்கிறது. அதன் பிறகு, மனைவியின் ஃபேஸ்புக்கைப் பார்த்த கணவர், அந்த போட்டோவை பார்த்துக் கொந்தளித்திருக்கிறார். பிரச்னை முற்றிப்போக... அந்தப் பெண் தற்கொலை செய்துகொண்டார்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டியைச் சேர்ந்தவர் 29 வயது பரந்தாமன். இவருடைய மனைவி சத்யாவின் செல்போனில், தட்டாம்பாளையத்தைச் சேர்ந்த கரும்பு வெட்டும் தொழிலாளி ஸ்ரீதர், ஆபாச வார்த்தைகளைப் பேசித் தொந்தரவு செய்து வந்திருக்கிறார். கணவரிடம் சத்யா சொல்ல, உறவினர்களுடன் சென்று ஸ்ரீதரை எச்சரித்துள்ளனர். ஆனாலும், மாதக்கணக்காக தொல்லை தொடரவே போலீஸில் புகார் கொடுத்தனர். அப்போதும் தொல்லை ஓயாத நிலையில், ஒருகட்டத்தில் மனைவி மீதே பரந்தாமனுக்கு சந்தேகம் வந்துவிட்டது. ஜனவரி 17 அன்று பூச்சிக்கொல்லி விஷத்தைக் குடித்துத் தற்கொலை செய்துகொண்டு விட்டார். சத்யாவின் புகாரின் பேரில் தற்போது ஸ்ரீதரை தேடிக் கொண்டிருக்கிறது போலீஸ். ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் என்று பிஞ்சுக் குழந்தைகளுடன் பரிதாபமாக நிற்கிறார் 25 வயது சத்யா!
மத்திய இணையமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் சமீபத்தில் மர்மமான முறையில் இறந்திருக்கும் விஷயத்தில்கூட, தகவல் தொழில்நுட்பத்தின் கோரக் கரங்கள் படிந்திருக்கின்றன. 'ட்விட்டர்' மூலமாக கணவன், மனைவி மற்றும் கணவனின் புதுத்தோழி என்று வர்ணிக்கப்படும் பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர் மெர் தரார் ஆகியோரிடையே நடந்த பகிரல்கள், மரணத்துக்கு முக்கிய காரணமாக வர்ணிக்கப்படுகிறது.
செல்போன், ஃபேஸ்புக், ட்விட்டர், இணைய பக்கங்கள் என்று தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி படுவேகமெடுத்து முன்னேறிக் கொண்டிருக்க, அதைவிட படுவேகமெடுத்துக் கொண்டிருக்கின்றன... இந்தத் தொழில்நுட்பங்களை வைத்து நடத்தப்படும் குற்றங்கள். அதற்கு ஒரு சோற்றுப் பதம்தான் மேற்கண்ட கொடூரச் செய்திகள். பல குடும்பங்களின் அமைதிக்கு, ஆப்பு வைத்துக் கொண்டிருக்கும் இதுபோன்ற விவகாரங்களால் பெரும்பான்மையாக பாதிக்கப்படுவது பெண்களே!
ஃபேஸ்புக் விவாகரத்து!
இதைப் பற்றி சில விஷயங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அழகுராமன்.
''இன்றைய சூழலில் ஒரு பெண்ணைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், அவரது ஃபேஸ்புக் பக்கத்துக்குச் சென்று ஃப்ரெண்ட் ஆனாலே போதும். 'தன் குடும்பம், தான் எங்கே குடியிருக்கிறேன்’ என்பதில் ஆரம்பித்து, தினசரி நடவடிக்கைகள் வரை ஒன்று விடாமல் 'ஃப்ராங்க்’காகப் பகிர்ந்துகொள்கிறார்கள். தான் போட்ட 'போட்டோ’ அல்லது 'போஸ்ட்’டுக்கு மற்றவர்கள் 'லைக்ஸ்’ போடாமல் விட்டுவிட்டால்கூட, மன உளைச்சல் அடைகிற அளவுக்கு ஃபேஸ்புக் வியாதி, இளைய தலைமுறையை ஆட்டிப்படைக்கிறது.
முன்பெல்லாம் விவாகரத்துக்காக நீதிமன்றம் வரும் தம்பதிகள், போலீஸிடம் புகார் கொடுத்த நகல் அல்லது எஃப்.ஐ.ஆர் நகலைக் கொண்டு வருவார்கள். இன்றைக்கோ மனைவி/கணவர் ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்த புகைப்படத்தையோ, அவர்களது பதிவையோ பிரின்ட் எடுத்துக்கொண்டு வருகிறார்கள். நம்மிடம் சுயகட்டுப்பாடு இல்லாததே இதற்கெல்லாம் காரணம்'' என்று சுட்டிக்காட்டிய வழக்கறிஞர், சமீபத்திய விஷயங்கள் சிலவற்றைப் பகிர்ந்தார்.
''ஐ.டி. கம்பெனியில் பணிபுரியும் அந்தப் பெண், தன் அலுவலக டூரின்போது சக அலுவலர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்திருக்கிறார். அதில் சக நண்பரின் கை, இந்தப் பெண்ணின் இடுப்பில் பட்டிருப்பது போல உள்ள புகைப்படத்தை, அவரது அலுவலக நண்பர்கள் ஃபேஸ்புக்கில் அப்லோட் செய்திருக்கிறார்கள். அந்த பெண்ணுக்கு நிச்சயதார்த்தம் நடந்த பிறகு, புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பார்த்த மாப்பிள்ளை பையன், 'எனக்கு இந்தப் பெண் வேண்டாம்’ என்று திருமணத்தை நிறுத்தியதோடு, அந்தப் பெண்ணைப் பற்றி மற்றவர்களிடமும் பகிர்ந்துகொள்ள... இதுவரை அந்தப் பெண்ணுக்கு திருமணம் நடக்கவேயில்லை.
'என் அம்மாவை கேவலமாகச் சித்திரித்து ஃபேஸ்புக்கில் எழுதியிருக்கிறாள் என் மனைவி. அதற்கு அவளுடைய நண்பர்கள் அடித்த கமென்ட்டைப் பாருங்கள்’ என்று அனைத்தையும் அள்ளிக் கொண்டு வந்து காண்பித்ததோடு, விவாகரத்து வாங்கித் தாருங்கள் என்று வந்து நின்றார் ஒரு கணவர். எவ்வளவோ அறிவுரைகள் சொல்லியும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. தற்போது வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. குடும்ப விஷயம் என்பது கண்ணாடி போன்றது. அதை யார் யாரிடம் பகிர வேண்டும் என்ற வரைமுறை தெரியாமல் பொது சபையில் பகிர்வதால் வரும் வினைகள்தான் இவையெல்லாம்'' என்று ஆதங்கப்பட்டார், அழகுராமன்.
மூன்றாவது கண் வில்லன்கள்!
நமக்கே தெரியாமல், பொதுக் கழிவறைகள், ஹோட்டல்களின் படுக்கை அறை மற்றும் குளியல் அறைகள், பெரிய பெரிய துணிக்கடைகளின் டிரயல் ரூம்கள்... என பல இடங்களிலும் மூன்றாவது கண்ணாக கேமரா ஒளிந்திருப்பது சர்வசாதாரணமாகி விட்டது. இப்படி எடுக்கப்படும் பெண்களின் போட்டோக்களில் இருக்கும் தலையை வேறொரு நிர்வாண உருவத்துடன் பொருத்தி, அந்தப் பெண்ணின் வாழ்வைச் சீரழிக்கும் சைபர் குற்றவாளிகள் அதிகரித்துக் கொண்டுள்ளனர். எல்லோர் கைகளிலும் செல்போன்கள் இருப்பதால், பக்கத்து வீட்டு குளியல் அறை ஜன்னல் வழியாக அந்த வீட்டுப் பெண்களைத் தாறுமாறாக படம்பிடித்து, இணையங்களில் உலவவிடுவதும் அதிகரித்துள்ளது!
சைபர் குற்றங்களின் வீரியம் குறித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் வே.பாலுவிடம் கேட்டபோது, ''மார்டன் உலகத்தில் செல்போன் வைத்திருப்பதை ஒரு கௌரவமாகவே கருதுகிறார்கள். அதிலும் கேமராவுடன் கூடிய உயர்ரக செல்போன்தான் பலருடைய சாய்ஸாக இருக்கிறது. எதைப் பார்த்தாலும் அதில் படம் பிடிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். எதிர்பாராதவிதமாக நம் செல்போனை தொலைத்துவிட்டால் போதும்... குடும்ப விவரங்களிலிருந்து அந்தரங்கம் வரை அனைத்தும் அடுத்தவரால் திருடப்பட்டுவிடும். அதனால் செல்போனில் எப்போதும் ஒரு செக்யூரிட்டி பாஸ்வேர்டு போட்டு வைத்துக்கொள் வது மிகவும் நல்லது. மிஸ்டு கால் கொடுப்பதன் மூலமாகவும் பல குற்றங்கள் அரங்கேறிவிடுகின்றன. இந்த விஷயத்திலும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
குழந்தைகள் இன்றைக்கு எந்த சந்தேகம் வந்தாலும் கூகுளிடம்தான் கேட்கிறார்கள். தானாகவே வந்து விழும் சில இணைய பக்கங்கள், ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர்களுக்கு அறிமுகம் செய்கிறது. அதனால் தயவு செய்து உங்களது கண்காணிப்பு இல்லாமல் இணையத்தில் குழந்தைகளை உலவ விடாதீர்கள்.
பாசக்கார கணவனால், மோசம் போகக்கூடும்!
நமக்குத் தெரியாமலே நம்மை சிக்க  வைக்கக் கூடிய வலிமை உள்ளவை இந்த சைபர் க்ரைம்கள். அல்லது, வலிய போய், அறியாமை காரணமாக நாமே சிக்கிக்கொள்வதும் நடந்துவிடும். பெரும்பாலான பெண்கள், தங்களுக்கு மிக நெருக்கமான ஆண்களாலேயே இதுமாதிரியான குற்றங்களில் சிக்கிக்  கொள்கிறார்கள். உதாரணத்துக்கு...  கணவ னும்  மனைவியும் நெருக்கமாக  இருப்பதை,  கணவரே செல்போன் மூலமாக படம்  எடுக்கிறார். அதை மனைவி தடுக்க நினைத்தால், 'உன் மீதுள்ள பாசத்தால்தான் எடுக் கிறேன். நீ வெளியூர் சென்றால், அந்த வீடியோவை பார்த்து உன் நினைவை ஆற்றிக் கொள்வேன்' என்றெல்லாம் பேசி, சமாளிப் பார் கணவர். இந்தப் பேச்சில் மயங்கி  மனைவியும் சம்மதித்துவிடுவாள்.
ரகசியமாகவே இருக்கும் இந்த வீடியோ... ஒருவேளை கணவரின் செல்போன் தொலைந் தாலோ, ரிப்பேருக்கு போனாலோ, அல்லது கணவன் - மனைவி இடையே மோதல் வந் தாலோ... ஏதாவது ஒரு வகையில் வெளியில் வந்து, மனைவியின் எதிர்காலத்தையே கேள்விக்குள்ளாக்கிவிடும்.
செல்போனில் பேசுவதிலும் கவனமாக  இருக்க வேண்டும். காதலர்கள் பேசிக்கொள் ளும் கொஞ்சலான உரையாடல்கள், கண வன் - மனைவி இடையேயான ரொமான்ஸ் பேச்சுக்கள் என பலவற்றையும், செல் போனில் இருக்கும் ரெக்கார்டு ஆப்ஷன் மூலமாக மிகச்சுலபத்தில் பதிவு செய்துவிட முடியும். அத்தகைய ஆபாச குரல் பதிவுகளை 'யூடியூப்’-ல் வெளியிட்டு, சம்பந்தப்பட்ட வரை அவமானப்படுத்தவும் மிரட்டவும்கூட வாய்ப்பிருக்கிறது.
சைபர் க்ரைமை பொறுத்தவரை நேரடியான தண்டனை காலம் குறைவுதான். சைபர் க்ரைம்களில் கொலை, கொள்ளை, கடத்தல் முதலியவற்றுக்குக் குற்றத்தின் அடிப்படையில் தண்டனை வழங்கப்படுகிறது. கையில் போன் இருக்கிறதே என்று வெளி யிடங்களில் யாரையாவது நாம் புகைப்படம் எடுத்தால், அதுவும்கூட நம்மை சைபர் க்ரைம் விஷயத்தில் சிக்க வைக்கும் அள வுக்குக் கொண்டு செல்லும் ஆபத்து காத் திருக்கிறது. எனவே, விழிப்போடு இருப்பது தான் புத்திசாலித்தனம்'' என்று எச்சரிக்கை செய்தார், வே.பாலு.
பொது இடங்களில் வரம்பு மீறாதீர்!
'இதுபோன்ற சூழலில் ஒரு பெண் எப்படி ஜாக்கிரதையாக நடந்துகொள்ள வேண்டும்’ என்பதுபற்றி பேசிய ஓய்வுபெற்ற டி.ஜி.பி- யான திலகவதி ஐ.பி.எஸ்., ''ஆண் நண்பருடன் சேர்ந்து புகைப்படம் எடுக்க வேண்டிய சூழ்நிலை வந்தால், நெருக்கம் காண்பிக்காத அளவுக்கு 'ஃப்ரெண்ட்லி’யாக போஸ் கொடுங்கள். ஆண் நண்பர்களுடன் வெளியில் செல்லும்போது, 'நம்மை யாரும் கவனிக்கவில்லை’ என்று நினைத்து, வரம்பு மீறி புகைப்படம் எடுப்பதோ அல்லது போஸ் கொடுப்பதோ வேண்டவே வேண்டாம். இன்றைக்கு எல்லோரது கைகளிலும் கேமரா செல்போன்கள் தவழ்கின்றன. 'நமக்கே தெரியாம நம்மை இஷ்டத்துக்கு படம் எடுக்க மற்றவர்களால் முடியும்’ என்பதால், பொது இடங்களில் ஆடைகளில் கவனமாக இருங்கள். அதேபோல, வெளியிலோ அல்லது ஹோட்டல்களுக்கோ செல்லும்போது, உங்கள் மீது தேவையில்லாமல் ஃப்ளாஷ் ஒளி பட்டால், தைரியமாக விசாரணையில் இறங்கி சந்தேகப்படுபவர்களின் கேமராவை செக் செய்துவிடுங்கள். இதையெல்லாம் மீறி ஏதாவது ஒரு புகைப்படம் காரணமாக நீங்கள் பிரச்னையை சந்திக்க நேர்ந்தால், அஞ்சாமல் எதிர்த்துப் போராடுங்கள். அதைவிட்டு மனம் உடைவதோ... தற்கொலை எண்ணங்களை ஏற்படுத்திக் கொள்வதோ முட்டாள்தனமானது'' என்றார், அழுத்தமாக.
துவள வைத்த தோழி!
சைபர் குற்றங்கள் பற்றி பேசிய மதுரை எஸ்.பி-யான பாலகிருஷ்ணன், ''இன்டர்நெட், ஃபேஸ்புக், எஸ்.எம்.எஸ் போன்றவற்றில் நடக்கும் குற்றங்கள் மட்டும் சைபர் குற்றங்கள் இல்லை. எலெக்ட்ரானிக்ஸ் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றங்களும் சைபர் குற்றங்களையே சாரும். ஸ்கைப், வாய்ஸ் சாட், இன்டர்நெட் சாட்... என பெண்களிடம் சாட் செய்வதோடு ரெக்கார்ட் செய்துகொண்டு, அந்தரங்கமான பேச்சுக்களையும், அந்தரங்க உறுப்புகளையும் படம்பிடித்து வேறொரு படத்துடன் சேர்த்து வெளியிடுவது; ஆபாசமாக எஸ்.எம்.எஸ் அனுப்புவது; பொது இடங்களில் பெண்களுக்கு தெரியாமல், அவர்களைப் படம் எடுப்பது/ வெளியிடுவது... போன்றவையும் சைபர் குற்றங்களே.
மதுரையில் உள்ள பிரபலமான கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர், தனது புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பயன்படுத்தியுள்ளார். அந்தப் புகைப்படத்தை எடுத்த சைபர் க்ரைம் குற்றவாளிகள், 'இவர் கால் கேர்ள்’ என குறிப்பிட்டு அந்த பெண்ணின் செல் போன் எண்ணையும் கொடுத்துவிட்டனர். இது தொடர்பாக நாங்கள் விசாரித்து பார்த்ததில், 'அந்த மாணவியுடன் படிக்கும் தோழிதான் குற்றவாளி’ என்பதைக் கண்டுபிடித்தோம். அவர்களுக்கு இடையிலான பிரச்னையில் இதுபோன்று செய்துவிட்டதாக அந்தத் தோழி வாக்குமூலம் கொடுக்க, அதிர்ந்து போனோம்'' என்று சொன்ன பால கிருஷ்ணன், அடுத்து சொன்னது பேரதிர்ச்சி!
வில்லனாக மாறிய தோழியின் கணவன்!
''தான் குளிக்கும் வீடியோ, 'யூடியூப்’-பில் உலவிக் கொண்டிருப்பதாக ஒரு பெண் பத றிக் கொண்டு எங்களிடம் ஓடி வந்தார். களத் தில் இறங்கி விசாரித்தபோது எங்களுக்கே பலத்த அதிர்ச்சி. அந்தப் பெண், தன் தோழி வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அங்கே குளித் திருக்கிறார். அப்போது 'டூத் பிரஷ் மைக்ரோ கேமரா’ மூலம், தோழியின் கணவனே படம் பிடித்து, 'யூ டியூப்’-ல் உலவ விட்டிருக்கிறான். பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில், தோழியின் கணவன் கைது செய்யப் பட்டு... அவனுடைய செல்போனில் இருந்த அந்த வீடியோ பதிவு அழிக்கப்பட்டதுடன், இணையத்திலிருந்தும் நீக்கப்பட்டது.
இதிலிருந்து பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம்... குற்றங்கள் எங்கே, எப்போது, எப்படியெல்லாம் நடக்கும் என்பதை யாருமே யூகிக்க முடியாது என் பதைத்தான். ஆம், கூட இருந்து கொண்டே அத்தனையும் செய்வார்கள். சொந்த வீட்டி லேயே வெகு ஜாக்கிரதையாக வாழ வேண் டும் என்கிற அளவுக்கு நெருக்கடிகள் முற்றிக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில், வெளியிடங்களுக்குப் போகும்போது, இரு நூறு சதவிகித பாதுகாப்பு உணர்ச்சியுடன் செயல்படுவது நல்லது'' என்று அக்கறை பொங்கச் சொன்னார்!

தமிழகத்துக்கு 2வது இடம்!
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், கடந்த ஆண்டு வெளியிட்டுள்ள தகவலின்படி, நாடு முழுக்க 86 கோடியே 16 லட்சம் செல்போன் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளன. உத்தரப்பிரதேசம் 12.16 கோடி என்ற எண்ணிக்கையுடன் முதலிடத்திலும், 7.18 கோடி என்ற எண்ணிக்கையுடன் தமிழகம் இரண்டாவது இடத்திலும் இருக்கிறது
சமீபத்தில் வெளியான மற்றொரு புள்ளிவிவரத்தின்படி, 'இந்தியாவில் மட்டும் செல்போன்கள் மூலம் இணையதளம் பயன்படுத்து வோர் எண்ணிக்கை வருகிற மார்ச் மாதத்துக்குள் 15 கோடியே 50 லட்சமாக உயரும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
'உடனடி நடவடிக்கை அவசியம்!’
சைபர் வில்லன்களிடம் சிக்காமலிருக்க, மதுரை எஸ்.பி. பாலகிருஷ்ணன் தரும் டிப்ஸ்...
ஃபேஸ்புக்கில் பெண்கள் புகைப்படங்களைப் போடுவதை கூடுமானவரை தவிர்க்க வேண்டும். செல்போனில் வேண்டாத, பெயர் தெரியாத அழைப்புகள் வந்தால், வீட்டில் உள்ள பெரியவர்களிடம் கொடுத்துப் பேச வைக்க வேண்டும். ஃபேஸ்புக்கில் முகம் தெரியாத நபர்கள் நட்பு கோரிக்கை எழுப்பினால் ஏற்றுக்கொள்ளக் கூடாது.
  ஃபேஸ்புக்கில் நடக்கும் குற்றங்கள் குறித்து ஃபேஸ்புக்கில் 'ரிப்போர்ட்’ பகுதியில் 'க்ளிக்’ செய்து புகார் தந்தால், உடனே ஃபேஸ்புக் நிர்வாகத்தினர், அருகில் இருக்கும் காவல்நிலையத்துக்கு உங்கள் புகாரை பரிந்துரை செய்வார்கள். நாங்கள் துரிதமாக நடவடிக்கை எடுப்போம். 'தமிழக காவல்துறை’ என்ற வெப்சைட்டில் புகார் கொடுத்தால், உங்களைப் பற்றிய தகவல்களை ரகசியமாக வைத்துக்கொண்டு குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தண்டனை வாங்கித்தருவோம்.
 செல்போன், எம்.எம்.எஸ்., எஸ்.எம்.எஸ்., ட்விட்டர், இணைய பக்கங்கள் என்று எந்த ரூபத்தில் உங்களுக்குத் தொந்தரவுகள் வந்தாலும், அதைப் பற்றி உடனடியாக உரிய வகையில் நடவடிக்கைக்கு உட்படுத்துங்கள். அதைவிடுத்து, 'தானாகவே சரியாகிவிடும்’ என்று நினைத்தால், அதுவே எதிரிக்கு இடம் கொடுத்தது போலாகிவிடும். பிறகு, அதிலிருந்து விடுபடுவதற்குள் போதும்போதும் என்றாகிவிடும்.

பெண்களே... மிகவும் கவனமாக இருங்கள்!
 உங்களது ஒவ்வொரு அசைவையும் புகைப்படம் எடுக்க ஒரு கூட்டமே திரிகிறது என்பதை மறவாதீர்கள். பொது இடங்களில் நடக்கும்போதுகூட உங்களைப் புகைப்படம் எடுத்து, அதை இணையத்தில் உலவவிடும் நாசக்காரர்கள் இருக்கிறார்கள். பசியால் அழும் பிள்ளைக்கு பால்கொடுக்கும் தாயைக்கூட இந்தச் சதிகாரர்கள் விட்டுவைப்பதில்லை. மறைந்து நின்று புகைப்படம் எடுத்து அட்டூழியம் செய்கிறார்கள்.  
 'ஒரு போன் செய்துவிட்டு தருகிறேன்' என்று உங்களது கைபேசியை அறிமுகம் இல்லாத நபர்கள் கேட்டால், தரவே தராதீர்கள். தெரிந்தவர்களாக இருந்தால், அவர்கள் போன் பேசத்தான் அதை வாங்கினார்களா என்பதை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். உங்களிடம் இருந்து கைமாறிய நொடிகளில்கூட உங்கள் போனை வைத்து, வில்லங்கங்களை விலைக்கு வாங்கித் தந்துவிடுவார்கள்.
 செல்போனை ரிப்பேருக்கு கொடுக்கும் போது, மறக்காமல் புகைப்படங்களை அழித்து விடுங்கள். மெமரி கார்டை அகற்றிவிட்டு கொடுங்கள். கான்டாக்டில் இருக்கும் எண்களை யும் கூட கணினியில் சேமித்துக் கொண்டு, செல் போனில் இருந்து அகற்றிவிட்டே கொடுங்கள்.
 முன்பின் தெரியாதவர்களை ஃபேஸ்புக் நண்பர்கள் பட்டியலில் இணைக்காதீர்கள். முடிந்தவரை பிரச்னைகள் எழக் காரணமாக தெரியும் நபர்களை, நண்பர்கள் பட்டியலில் இருந்து நீக்கிவிடுவது நல்லது. ஃபேஸ்புக்கில் ஒவ்வொருமுறை எழுதும்போதும் கவனமாக எழுதுங்கள். உங்களது எழுத்தே உங்களை சிக்க வைக்கும் வாய்ப்பை ஏற்படுத்திவிடக்கூடும் ஜாக்கிரதை!

தண்டனைகள் பலவிதம்..!
சைபர் க்ரைம் தொடர்பான குற்றங்களுக்காக போலீஸ் வழக்குப் பதிவுசெய்து கைது செய்தால், ஐ.டி சட்டம் 2008-ன் படி மூன்று ஆண்டுகள் முதல், ஆயுள் வரை தண்டனையாக வழங்கப்படும். ஒரு லட்சம் ரூபாய் முதல் ஐந்து லட்ச ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும். இவர்களில் ஆபாசமாக மெசேஜ் அனுப்புவது, ஆபாசமாக போட்டோ வெளியிடுவது, ஆபாச வீடியோ காட்சிகளை வெளியிடுவது, குழந்தைகள் தொடர்பான ஆபாசப் படங்களை வெளியிடுவது, ஆண் - பெண் இருவரின் உடல்பாகங்களை சட்டவிரோதமாக பயன்படுத்தி வெளியிடுவது உள்ளிட்ட குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டால், அவர்கள் ஜாமீனில் வரமுடியாத சட்டங்களின்படி கைது செய்யப்படுவார்கள்.
சென்னையில் கடந்த ஆண்டு 1,472 சைபர் க்ரைம் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் 27 புகார்கள் வழக்குப் பதிவு செய்யப்பட்டும், 35 குற்றவாளிகள் கைதும் செய்யப்பட்டும் உள்ளனர். இந்தியா முழுவதும் ஓர் ஆண்டுக்கு சைபர் க்ரைம் சம்பவங்களில் வெறும் 21% அளவுக்குத்தான் புகார்களாக காவல் நிலையங்களில் பதிவாகின்றன. இந்தியாவில், இன்டர்நெட் மோசடிகள் மூலமாக, ஆண்டுக்கு 5 பில்லியன் டாலர் அளவுக்கு பண மோசடிகள் நடக்கின்றன.
எப்படி புகார் செய்வது?
சைபர் க்ரைம் தொடர்பான புகார்களை, சென்னையைப் பொறுத்தவரை மாநகர போலீஸ் கமிஷனரிடம் நேரடியாகவும், நேரில் செல்ல இயலாதவர்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் தொலைபேசி எண்கள் மூலமாகவும், மெயில் ஐ.டி வழியாகவும் தெரிவிக்கலாம். தவிர, தமிழகத்தின் அனைத்து உள்ளூர் காவல் நிலையங்களிலும் சைபர் க்ரைம் புகார்களை உடனுக்குடன் தெரிவிக்கலாம்.  
எஸ்.எம்.எஸ் : 95000 99100; போன் : 044 - 23452350; இ-மெயில் முகவரி:  cop@vsnl.net.

அதிர்ச்சிப் புகைப்படம்!
'சன் டிடெக்டிவ் ஏஜென்சி’ எனும் அமைப்பை நடத்தி வரும் தடயவியல் சிறப்பு நிபுணர் வரதராஜன், சொன்ன ஒரு தகவல், அதிர வைப்பதாக இருந்தது. ''சில மாதங்களுக்கு முன் டெல்லியில் ஒரு பள்ளி ஆசிரியையின் நிர்வாணப் புகைப்படம் நெட்டில் உலவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனே அந்த ஆசிரியை போலீஸில் புகார் கொடுத்தார். அவர்கள் எங்களிடம் அதை ஒப்படைத்தார்கள். பலவித பிரயத்தனங்களுக்குப் பிறகு, அந்த ஆசிரியையிடம் படிக்கும் 8-ம் வகுப்பு மாணவன்தான் குற்றவாளி என்பதைக் கண்டுபிடித்தோம். வீட்டுப்பாடம் செய்யவில்லை என்று அந்த மாணவனை திட்டியிருக்கிறார் ஆசிரியை. கோபமடைந்த மாணவன் வகுப்பில் ஆசிரியை பாடம் நடத்தும்போதே கையில் வைத்திருந்த செல்போன் மூலம் அவரைப் புகைப்படம் எடுத்திருக்கிறான். தொழில்நுட்ப யுக்திகளைக் கையாண்டு, வேறொரு நிர்வாணப் படத்துடன் 'மார்ஃபிங்’ செய்து, ஆசிரியையின் முகத்தை அதில் பொருத்தி நெட்டில் உலவ விட்டிருக்கிறான்'' என்று சொன்ன வரதராஜன்,
''இதுபோன்று நாடெங்கிலும் பல்வேறு சம்பவங்கள் தினந்தோறும் நடந்துகொண்டு இருக்கிறது. அதனால் புகைப்பட விஷயத்தில் ஒவ்வொருவரும், குறிப்பாக, பெண்கள் கவனமாக இருக்க வேண்டியது மிக அவசியம். அதேசமயம், இதுபோன்ற புகார்களுக்கு உடனடியாக குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் வசதிகளும், அதற்கு போதுமான நிபுணர்களும் தமிழகத்தில் இல்லை என்பது வருத்தமான விஷயம். அரசாங்கம் உடனடியாக திறமைவாய்ந்த நிபுணர்களைப் பணியமர்த்த வேண்டும். அப்போதுதான் குற்றங்கள் உடனுக்குடன் கண்டறியப்பட்டு, தண்டனைகள் வழங்க முடியும். இதன் மூலமாக மேற்கொண்டு குற்றங்கள் நடப்பதையும் குறைக்க முடியும்'' என்று சொன்னார்.

இந்தியா 2வது இடம்!
சமூக வலைதளமான ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட வலைதளங்களை உலகெங்கிலும் உள்ள 60-க்கும் மேற்பட்ட நாட்டினர் பரவலாக பயன் படுத்துகின்றனர். இதில், 92 மில்லியன் (7.73%) பயன்பாட்டாளர்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது இந்தியா.
17 வயது மற்றும் அதற்கு கீழ் : 11%
18-24 வயதினர் : 50%
25-34 வயதினர் : 28%
35-44 வயதினர் : 6.6%  
45-54 வயதினர் :  2.2%
55 வயது மற்றும் அதற்கு மேல் 2.2%
இவர்களில் 75 சதவிகிதத்தினருக்கும் அதிக மானோர், ஆண்களே என்பது, பெண்கள் குறித்து வைத்துக்கொள்ள வேண்டிய விஷயமாகும்!

Saturday, May 10, 2014

இந்தியாவுக்கு தடை விதித்தது சவூதி அரேபியா

மே 1 -ம் தேதி முதல் இந்திய மாம்பழங்களை இறக்குமதி செய்ய ஐரோப்பிய நாடுகள் தடை விதிதத் நிலையில் இந்தியாவிலிருந்து மிளகாய் இறக்குமதி செய்ய சவூதி அரேபியா தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய தூதரகத்திலுள்ள அதிகாரி சுரேந்தர் பகத் கூறியதாவது:
மே 30 ம் தேதி முதல் இந்தியாவிலிருந்து மிளகாய் இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கும் முடிவை சவூதி வேளாண்மை அமைச் சகம் எடுத்துள்ளது என்ற தகவல் எங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண சவூதி அதிகாரி களிடம் பேசி வருகிறோம் என பி.டி.ஐ.க்கு போனில் தொடர்பு கொண்டு தெரிவித்தார் பகத்.
இந்தியாவிலிருந்து இறக்குமதியான மிளகாயை மாதிரிக்காக சோதனை செய்த போது அதில் பூச்சிக்கொல்லி மருந்து அதிக அளவில் படிந்து இருப்பது தெரியவந்தது. எனவே தடை விதிப்பது என முடிவு செய்துள்ள தாக வேளாண் அமைச்சக அதிகாரி ஒருவர் கூறினார். 2013ம் ஆண்டு ஏப்ரல்-நவம்பர் காலத்தில் 181500 டன் எடை கொண்ட 30 லட்சம் டாலர் மதிப்பு மிளகாயை இந்தியா ஏற்றுமதி செய்ததாக இந்திய வாசனை திரவியங்கள் வாரியம் தெரிவித்துள்ளது. 

The Hindu,Tamil

Friday, May 9, 2014

தொழ பள்ளிக்கு செல்லும் முன் வெங்காயம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்

சூரா அல் பகரா தொடரில் அத்தியாயம் 61 - 66
விளக்கங்கள்  சிறப்புகள் மற்றும் அதன் பலன்கள்

வட்டியின் உதவியோடு வாங்கும் முதல் வீடு  அல்லது முதல் வியாபாரம் ஹலாலா?
அல்லாஹ்வோடு நேரடியாக யுத்தம் செய்வது போன்ற செயல் எவை?
ஜும்மா  நேரத்தில் வியாபாரம் செய்யலாமா?
அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறாக சூழ்சி செய்பவர்களின் தண்டனைகள் இம்மையிலா அல்லது மறுமையில?
யூதர்கள் ஒருபோதும் நேருக்கு நேர் யுத்தம் செய்ய மாட்டார்கள்
தொழ பள்ளிக்கு செல்லும் முன்  வெங்காயம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்
குர்ஆன் பின்பற்றும்போது சோம்பேறித்தனமாக இருக்க கூடாது
குர்ஆனின் கட்டளைகளை  நிராகரித்தவர்களுக்கும்  பாராமுகமாக இருப்பவர்களுக்கும்  உதாரணம் அல்லாஹ் பனு இஸ்ராயில் கூட்டத்தினரை  குரங்காக மாற்றியது
நபிமார்களும் மற்ற மக்களும் சமமா?

Tamil Tafseer Team, Sydney

 http://youtu.be/QJjlhs0pn5o

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!